அந்தரங்க படங்கள் வெளியானது எப்படி? ஹன்சிகா

அந்தரங்க படங்கள் வெளியானது குறித்து நடிகை ஹன்சிகா விளக்கம் அளித்து இருக்கிறார்.

நடிகை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தனது போன் மற்றும் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டதாகவும் அதை மீட்கும் முயற்சியில் தனது குழுவினர் ஈடுபட்டு உள்ளனர் என்றும் ஹன்சிகா கூறினார்.

ஆனால் ஹன்சிகாவே விளம்பரத்துக்காக இந்த படங்களை வெளியிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுகிறார் என்ற விமர்சனங்களும் கிளம்பின. அந்த படங்களில் ஹன்சிகா நீச்சல் உடையில் இருக்கிறார். எனவே அதுபோன்ற படங்கள் இப்போது இணையதளத்தில் கசிந்ததில் என்ன தவறு இருக்கிறது? என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஹன்சிகா விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-

“நான் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது எனது போனில் கோளாறுகள் ஏற்பட்டன. அதன்பிறகு எனது அந்தரங்க படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்கள் 4 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. அதை யாரோ ஹேக் செய்து வெளியிட்டு விட்டனர்.

விளம்பரத்துக்காக நானே இந்த படங்களை வெளியிட்டதாக சிலர் விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. சில கருத்துக்கள் என்னை காயப்படுத்தவும் செய்தன. மனசாட்சி இல்லாதவர்கள் இப்படி பேசுகிறார்கள். சிலர் எனக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டனர். இது ஒரு பாடம். எனது கணக்குகளை ஹேக் செய்தவர்களை கண்டுபிடிக்கும் பணி நடக்கிறது.”

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Related posts