தமிழில் நடிக்க அமிதாப்பாச்சான் 40 நாட்கள் தமிழகம் வருகிறார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இதுவரை தமிழ் படங்களில் நடித்ததில்லை. சிவாஜி, 2.0 படங்களில் ரஜினியுடன் நடிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் வெவ்வேறு காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் வருடக்கணக்கில் அமிதாப்பை பின்தொடர்ந்து தமிழில் நடிக்க அவரது கால்ஷீட் பெற்று வந்திருக்கிறார்.

‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன். அவர், ‘உயர்ந்த மனிதன்’ என்ற புதிய பட ஸ்கிரிப்ட்டை எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறினார். அவருக்கு பிடித்தது. பிரதான வேடமொன்று படத்தில் இடம்பெறுவதால் அதற்காக ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என பேசப்பட்ட நிலையில் பின்னர் அமிதாப்பை அணுக முடிவு செய்யப்பட்டது. மும்பை சென்ற இயக்குனரும், எஸ்.ஜே. சூர்யாவும் அமிதாப்பை நேரில் சந்தித்து கதை கூறினர். அதை கேட்டவுடன் சில மாற்றங்கள் கூறி இதனை ஸ்கிரிப்ட்டில் செய்தால் நன்றாக இருக்கும் என்று அமிதாப் கூறினார். அதை ஏற்று ஸ்கிரிப்ட்டில் மாற்றங்கள் செய்து மீண்டும் அவரிடம் கதை கூறினர். அது அமிதாப்பை கவரவே நடிக்க சம்மதம் தந்தார்.

கடந்த வருடமே இப்படம்பற்றிய அறிவிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டாலும் படப்பிடிப்பு தொடங்காமலிருந்தது. தற்போது அமிதாப்பச்சன் ஒட்டுமொத்தமாக 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார். வரும் மார்ச் 20ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தமிழ், இந்தி இருமொழி களில் இப்படம் உருவாகிறது. இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யா, ‘மான்ஸ்டர்’ என்ற அறிவியல் பின்னணி கதையில் நடித்து வருகிறார்.

Related posts