காதலர் தினத்தில் வருகிறது மஞ்சு வாரியர் திரைப்படம்

பிரியா பிரகாஷ் வாரியருக்கு பெரிதாக எந்த அறிமுகமும் தேவையில்லாமல் முதல் திரைப்படம் ரிலீஸாகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் டீஸரில் இடம்பெற்ற அவரது கண் சிமிட்டும் காட்சி அவ்வளவு பிரபலமானது. இந்தத் திரைப்படம் வருகிற காதலர் தினத்தன்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ரிலீஸாக உள்ளது. ‘ஒரு அடார் லவ்’ படத்தின் தமிழ் பதிப்பு விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த ‘கண் சிமிட்டி’ பிரியா பிரகாஷ் வாரியருடன் ஒரு நேர்காணல்..

படத்தில் நீங்களும் ரோஷனும் கண்களால் காதல் பரிமாறும் காட்சி சர்வதேச அளவில் வைரலானது. அந்தச் சூடு தணிவதற்குள் படத்தை ரிலீஸ் செய்திருக்கலாமே?

படத்தோட ஆரம்பகால படப்பிடிப்பில் அந்த பாட்டை மட்டும்தான் ஷூட் செய் திருந்தோம். அது முடிந்ததும் அடுத்தகட்ட ஷெட்யூலுக்கு தயாராகிவந்த நேரத்தில், இதை ஒரு ‘சினி கிளிப்ஸ்’ மாதிரி வெளியிடலாம் என்று படக் குழுவினர் யோசித்தனர். அப்படி வெளியானதுதான் கண்களால் காதல் பரிமாறும் அந்தக் காட்சி. அது இவ்ளோ வைரலாகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதுவரை, முக்கிய சில காட்சிகளில் மட்டுமே என் பகுதி கதை இருந்தது. அந்தக் காட்சி பிரபலமானதால், என் கதாபாத்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு, காட்சிகள் சேர்க்கப்பட்டன. இந்த டீஸர் வெளியான பிறகுதான் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கத் தொடங்கினர். அதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள் என்பதால் அதற்கான வேலைகளுக்கு நிறைய நேரமும் தேவைப்பட்டது.

பள்ளிக்கூட நாட்களின் நினைவுகள்தான் படத்தில் களமாமே?

பிளஸ் 1, பிளஸ் 2 காலகட்டத்தில் ஒரு பள்ளியில் நடக்கும் களம்தான் படம். தற்போதைய மாணவர்கள் பற்றிய கதையாக இல்லாமல், எல்லோரும் பழைய சம்பவங்களை நினைத்துப் பார்க்கிற மாதிரி இருக்கும்.

உங்கள் சொந்த பள்ளி அனுபவங்களை திரும்பப் பார்க்குற மாதிரி இருந்ததா?

நான் ஹை-ஸ்கூல் முடித்த ஒரு வருஷத்துக்கு பிறகு படப்பிடிப்பு ஆரம்பித்த படம் இது. அதுவே எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. அதோடு, படத்தில் நடிச்ச பலரும் கிட்டத்தட்ட என் வயது நண்பர்கள் என்பதால் ரொம்பவே என்ஜாய் பண்ணி நடிச்சோம். பள்ளிக்கூட காலகட்டம் போல, இந்த படப்பிடிப்பு காலமும் எங்களுக்கு இனிப்பான அனுபவமா அமைஞ்சது.

சமூக வலைதளம் உங்களுக்கு ஏற்படுத் திக் கொடுத்த அறிமுகம், விளம்பரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சினிமாவில் நடிக்கணும் என்பது சின்ன வயதில் இருந்தே என் ஆசை. அதை அப்பா, அம்மாகிட்ட சொல்லிச் சொல்லியே வளர்ந்தவள் நான். படிப்பு கெடா மல் இருந்தால் போதும்னு அவங்களும் சம்மதிச் சிட்டாங்க. இன்று சமூக வலை தளங் களால் நல்லது, கெட்டது என இரண்டுமே நடக்குது. என் விஷயத்தில் சமூக வலைதளத்தால் நல்லது கிடைச்சிருக்கு. ஒரு சின்ன, சாதாரண காட்சி, உலக அளவுக்கு மாபெரும் உயரத்துக்குப் போகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியல. சமூக வலைதளத்தால்தான் அது சாத்தியமானது. அதேபோல, ‘ஒரு அடார் லவ்’ திரைப்படமும், மக்களிடம் எனக்கு நல்ல பேரு வாங்கித் தரணும் என்பதுதான் இப்போ என் எதிர்பார்ப்பு.

உங்கள் நடிப்பில் இந்தியில் உருவாகி வரும் ‘தேவி பங்களா’ படம் சர்ச்சைகளை எழுப்பியுள்ளதே?

கேள்விப்பட்டேன். ஆனால், இப்போ வரை அந்த செய்தி என் காதுக்கு நேரடியாக வரவில்லை. எல்லாமே வதந்திகள்னுதான் சொல்லணும். நடிகை தேவி வாழ்க்கை கதைக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்தக் கதையின் கரு வேறு. வீணாக சர்ச்சையை உருவாக்குறாங்கன்னு நினைக்கிறேன். இன்னும் படப்பிடிப்பு இருப்பதால் படத்தின் கதை பற்றி இப்போது குறிப்பிட முடியாது.

நேரடி தமிழ் படத்துக்கு எப்போ வரப்போறீங்க?

அந்த ஆசை எனக்கும் இருக்கு. தொடர்ச்சியா கதை கேட்டு வர்றேன். நல்ல கதைகள் அமையும்போது கட்டாயம் நடிப்பேன்.

தீபிகா படுகோன்தான் உங்க ரோல் மாடலாமே?

ஆமாம். அவங்களோட படங்களை பார்த்தாலே, அது ஏன் என்று புரியும். மிகுந்த கவனம் எடுத்து, கதைகளை தேர்வு செய்து நடிக்கிறாங்க. அதுபோல நானும் வளரணும். கண்டிப்பா அது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.

Related posts