நிலா முற்றம் டென்மார்க்கில் நடந்த கவியரங்கம்

டென்மார்க் பரடைசியா நகரில் நிலாமுற்றம் என்ற கவிஞர்களின் கவியரங்க நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 27.01.2019 ) மிகவும் சிறப்பாக நடந்தேறியது. நிலா முற்றம் என்ற அமைப்பானது டென்மார்க்கில் முதன் முறையாக தனது கவியரங்கை நிகழ்த்துகிறது என்று கருதி போயிருந்தோம். நிலா முற்றம் என்ற பெயரை வேறும் எங்கோ கேட்டிருக்கிறோமே அது வேறு இது வேறா என்று எண்ணியபடியே அரங்கிற்குள் நுழைந்தபோது அங்கு காண்பிக்கப்பட்ட காணொளி அனைத்து கேள்விகளுக்கும் விடைதந்தது. தமிழகத்தில் இருந்து கவிஞர்கள், நிலாமுற்றம் அமைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கியதும், புலம் பெயர் நாடுகளில் இருந்து பல கவிஞர்கள் வாழ்த்து செய்திகளை பதிவாக்கியதும் அங்கு காணொளி மூலம் பார்த்தும் கேட்டும் உணரக் கூடியதாக இருந்தது. ஆக நிலா முற்றம் என்பது தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெளிநாடுகளுக்கு பரவலாக்கம் பெறும் ஓர் கவிதை ஆர்வலர் அமைப்பு என்பதை அந்த…

வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 04 ( 28.01.2019 )

உன் சுயமரியாதையை இழந்துவிடாதே..! உங்கள் சுயமரியாதையை உங்கள் நடத்தையால் நீங்களே குறைத்துக் கொள்ளலாம். அல்லாவிடில் இன்னொருவர் வேண்டுமென்றே குறைக்கும்போது, அதை அறியாமை காரணமாக நீங்களும் ஏற்றுக் கொள்ளும்போது இயல்பாகவே தோற்றுப் போய்விடுகிறீர்கள். எதிர்மறையாக எண்ணுதல், தன்னைத்தானே இயலாவாளி என்று தாழ்வாக மதிப்பிடுதல் போன்ற பழக்கங்களை நீங்கள் உங்கள் இளமைக்கால வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்ததா..? சிலவேளை நீங்கள் தாக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு துயர் சுமந்த வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்கள் மிக அருமையாகவே பாராட்டப்பட்டிருக்கலாம். கீழ்மைப்படுத்த முயல்வோரால் நீங்கள் ஒரு முட்டாள் என்று கருதுமளவுக்கு வீழ்த்தப்பட்டிருக்கலாம். இத்தகைய பாதகமான சமுதாய போக்கினால் உங்கள் முதலிடம் பறிபட்;டுப்போயிருக்கலாம். அதுபோல உங்கள் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டும் போயிருக்கலாம். மற்றவர்களின் இகழ்ச்சிகளை கேட்டுக் கேட்டே அதுதான் நீங்கள் என்ற முடிவுக்கு நீங்களே வந்தும் இருக்கலாம். இந்த கடந்தகால எண்ணங்கள் உங்களை பெறுமதியற்ற ஒருவராக்கிவிடும் மறந்துவிடாதீர்கள். இவைகளை எண்ணி…

மரண அறிவித்தல் திரு. தில்லையர் யோகசாமி ஓய்வுநிலை அதிபர்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையர் யோகசாமி அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற தில்லையர், மயிலி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கோபால் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கராணி அவர்களின் பாசமிகு கணவரும், ரவீந்திரன்(வலயக்கல்வி பணிப்பாளர்- வடமராட்சி), பாபு(சுவிஸ்), ரதி(கனடா), கோபு(சுவிஸ்), ராகுலன், ராதா(ஆசிரியை- யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயராணி(ஆசிரியை- யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி), நளினி(சுவிஸ்), குகதாசன்(கனடா), சிவனேஸ்வரி(சுவிஸ்), மங்களஜெயா, ரவீந்திரன்(பிரதி அதிபர்- யா/தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ராகவேந்திரன், ராகவர்ஷிதன், பாரத், நிலானி, பிரியந், பிரியங்கா, பிரவண்யா, பிரவீன், மாதுளா, மதுமிதா, மகிழினி, கயல்நிலவன், கயலத்தேவன், கயல்வீணா, திவ்யாஞ்சன், ஸ்வப்ரதாரா, ஹர்ஷப்ரதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று…

சுவிற்சலாந்து நாட்டின் இலக்கிய ஆளுமை கங்கைமகனுடன் ஒரு சந்திப்பு

சுவிற்சலாந்தில் வாழும் கங்கைமகன் நூல் வெளியீடு ஒன்றுக்காக டென்மார்க் வந்திருந்தார். அத்தருணம் அவரை சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டி. நேற்று ஞாயிறு நிலாமுற்றம் அமைப்பினரால் நடத்தப்பட்ட மகிழம்பூவும் அறுகம்புல்லும் என்ற புத்தக வெளியீட்டிலும், நிலாமுற்றம் கவியரங்கத்திலும் பங்கேற்க வந்திருந்தார். நயினாதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நயினாதீவை களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை வெளியிட்டபோது அதற்கு தலைமை தாங்கி தனது கருத்துக்களை வைத்திருந்தார். அவரிடம் அலைகளுக்காகவும் ரியூப்தமிழிற்காகவும் எடுக்கப்பட்ட பேட்டி.. அலைகள் 28.01.2019 திங்கள்

இன்றய காலைச் செய்திகள் காணொளி வடிவில்.. ( 28.01.2019 )

அலைகள் உலகச் செய்திகள் பல்வேறு வடிவங்களில் உலக மக்களுக்கு சென்றடைகின்றன. தினசரி நூற்றுக்கு மேற்பட்ட பெரிய, சிறிய வானொலிகள், இலட்சக்கணக்கானவர் இருக்கும் முகநூல்கள் என்று பல்கிப் பெருகி வருகிறது. ஆதரவு தரும் அலைகள் வாசகர்களுக்கே அனைத்துப்புகழும்.. இப்போது அன்றாடம் காணொளி வடிவாகவும் பரிணாமம் எடுத்துள்ளது. அனைத்து விதமான சமூக வலைத்தளங்களிலும் 24 மணி நேரமும் முழங்கிக் கொண்டிருக்கிறது.. நமது உலகச் செய்திகள். அலைகள் 28.01.2019

டென்மார்க் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது நாடே விழாக்கோலம்

இன்று டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் யூஸ்க் வங்கிக்கு சொந்தமான பொக்ஸ்சன் விளையாட்டரங்கில் மாலை 17.30 மணிக்கு உலக கிண்ண இறுதியாட்டம் நடைபெற்றது. கொன்ட் போல்ட் என்று டேனிஸ் மொழியில் அழைக்கப்படும் கைகளால் பந்தை எறியும் உதைபந்தாட்டம் போன்ற ஆட்டம். ஆண்களுக்காக நடைபெற்ற உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் எதிர்த்து மோதிய நோர்வேயை டென்மார்க் 31 - 22 என்ற கோல்கணக்கில் அபார வெற்றியீட்டி தங்கக் கோப்பையை சுவீகரித்தது. மூன்று தடவைகள் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் தோல்வியடைந்த டென்மார்க் இப்போதுதான் முதற்தடவையாக வெற்றி வாகை சூடியுள்ளது. சிறந்த விளையாட்டு வீரராக டென்மார்க்கின் மிக்கேல் கன்சன் தேர்வானார். இதைத் தொடர்ந்து நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் கேர்னிங் நகரில் உள்ள கொங்கிரஸ் சென்டருக்கு அழைத்து வரப்பட்டனர். அத்தருணம் மக்கள் அலையலையாக திரண்டு நின்று வரவேற்பு வழங்கினர். எமது ரியூப்தமிழ்…