ரஜினி மகள் சவுந்தர்யாவின் மறுமணம்

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து தன் மகனுடன், சென்னை, போயஸ் தோட்டம் வீட்டில், பெற்றோருடன் சவுந்தர்யா வசித்து வருகிறார்.

இந்நிலையில் சவுந்தர்யா கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை மறுமணம் செய்ய உள்ளார். சத்தமில்லாமல் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் திருப்பதிக்கு சென்று சிறப்பு தரிசனத்தின் மூலம் சுவாமி வெங்கடாஜலபதியை அவர்கள் தரிசனம் செய்தனர்.

அப்போது சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை சுவாமி பாதங்களில் வைத்து வணங்கி பூஜை செய்து பெற்றுக்கொண்டனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts