வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 03

நீ வளர்ந்து வந்த பின்னணியை ஏற்றுக்கொள்.. குழப்பத்துடனும் அச்சத்துடனும் வாழும் மனிதர்கள் தங்களுடைய கடந்த காலத்தை பார்க்க வேண்டும். நான் கடந்துவந்த பாதை பூக்களால் போடப்பட்டதல்ல கற்களும் முட்களும் நிறைந்ததென அரசியல் தலைவர்கள் கூட்டங்களில் முழங்குவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். காரணம் என்ன..? நாம் நடந்து வந்த பாதைதான் இன்று நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. எனவேதான் நாம் ஏன் இப்படியிருக்கிறோம் என்ற கேள்விக்கான விடை தேட வேண்டுமானால் வளர்ந்த விதத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உள்ள குறைபாடுகளை திருத்தாமல் வாழ்க்கையை வெற்றித்தடத்தில் நகர்த்த முடியாது. குடும்பத்தில் துன்பப்படுத்தப்பட்ட பிள்ளைகள் தம் பெற்றோரை விரும்புவதில்லை. அவை தம்மையே விரும்புகின்றன என்பது மேலை நாட்டு சமுதாய சிந்தனையாளர் ஜஸ்பா யூல் என்பவரின் கருத்தாகும். பிள்ளைகள் நேசிக்கும் விதமாக பெற்றோர் வாழாமையும், பெற்றோரை துன்பப்படுத்தும்படியாக பிள்ளைகள்…