பெல்ற் போடாது வாகனம் ஓட்டிய பிரின்ஸ் பிலிப் போலீஸ் தகவல்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய மகாராணியாரின் கணவரும் 97 வயதுடையவருமான இளவரசர் பிலிப் வீதி விபத்தில் சிக்கி அவருடைய வாகனம் சாலையில் குடை சாய்ந்து கிடந்தது தெரிந்ததே.

இவர் ஓட்டிய லான்ட் றோவர் வாகனம் இரண்டு பெண்கள் வந்த கியா காருடன் மோதியதில் காயமடைந்த பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வைத்தியசாலையில் இருந்த பெண் ஒருவர் கூறும்போது இது நல்ல செயல் அல்ல என்று கருத்துரைத்திருந்தார்.

விபத்திற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன.

01. சம்பவம் நடைபெற்ற ஏ 149 இலக்க வீதிப்பகுதி அதிகமான விபத்துக்கள் நடைபெறும் இடமாகும். 2012 – 18 ம் ஆண்டுப் பகுதியில் இந்தப்பகுதியில் மொத்தம் 40 விபத்துக்கள் வரை நடந்து ஐந்துபேர்கள் மரணமும் அடைந்துள்ளனர்.

92. பிரின்ஸ் பிலிப் காரை குறிக்கப்பட்ட வேகத்திற்கு கூடுதலான வேகத்தில் ஓட்டி விபத்தை சந்தித்தார் என்றும் கூறப்பட்டது.

விபத்தால் இளவரசருடைய வயதான உடல் உலுப்பி எறியப்பட்டுள்ளது. இருப்பினும் 97 வயதிலும் அவர் வாகனம் ஓட்ட அனுமதி இருப்பது அரச குடும்பம் என்ற ஒரே காரணத்திற்காகவா? என்று தெரியவில்லை. காரணம் அரச குடும்பத்திற்கு பல சலுகைகள் உள்ளன.

இப்போது மூன்றாவது காரணமும் வெளியாகியிருக்கிறது.

இளவரசர் தனது வாகனத்தில் போகும்போது சீட் பெல்ற்றைக் கூட போடவில்லை என்று போலீஸ் கூறுகிறது.

இதை பல ஊடகங்கள் முக்கிய செய்தியாக்கியுள்ளன.

மகாராணியாரோ அரண்மனையோ இளவரசரின் எதிர்கால கார் ஓட்டங்கள் பற்றி எதுவும் கூறவில்லை.

அரச குடும்பத்து காரினால் மோதினால் சொர்க்கபுரிக்கு போகலாமென்றோ.. இல்லை ஆபத்து இல்லை என்றோ கூறமுடியாதல்லவா..?

விபத்துக்கு அரசனென்ன ஆண்டியென்ன… எல்லாமே ஒன்றுதானே..? அதுதான் பிரித்தானிய போலீஸ் உறுமியுள்ளது.

அதிக வேகம்..
விபத்தில் மற்றவர் காயம்.. வைத்தியசாலையில் அனுமதி..
இன்னொருவருடைய வாகனம் சேதம்..
வீதியில் சரிந்து கிடக்கிறது இளவரசர் வாகனம்..
சீட் பெல்ட் போடவில்லை.

இந்த ஐந்து குற்றங்களை மற்றவர் செய்தால் பிரித்தானிய போலீஸ் இனிமேல் இப்படி செய்யக்கூடாதடா கண்ணு என்று செல்லம் கொஞ்சுமா என்பது கேள்வி.

இருந்தாலும் 97 வயது வரை நலமாக வாழ்ந்து காரையும் ஓடுகிறார் என்றால் அது சாதனைதான்..

அலைகள் 20.01.2019 ஞாயிறு

Related posts