இருபத்தியாறு வயது இளைஞர் பரிதாப மரணம் ஏன் தெரியுமா..?

டென்மார்க்கின் இன்றைய காலைச் செய்தியில் அதிக முக்கியம் பிடித்தது பராபின் ஓயில் என்ற திராவகத்தை உடலில் ஏற்றி மரணித்த 26 வயது பாடிபில்டர் ஒருவரிக் பரிதாப கதையாகும்.

பராபின் ஓயிலை ஏற்றுவதா.. ?

ஆம் அது ஒருவகை போதை வஸ்த்து போன்ற திராவகம். அதை உடலில் தொடர்ந்து ஏற்றி வந்தால் கைகளின் மசில்ஸ்கள் இயல்புக்கு மாறாக யானைக் கால்கள் போல பெருக்கும்.

இப்படி அழகு காட்டுவது இளைஞர்களுக்கு இன்றய தமிழில் சொல்வதானால் கெத்து..!

இறந்துவிட்ட இளைஞர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதை ஏற்றத் தொடங்கி விரைவான ஆணழகன் போல கட்டுடலை பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் தவிடு நிறத்தில் அவர் உடலில் புதிய அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன. வைத்தியரிடம் சென்றால் அவர் ஏற்றிய பராபின் ஓயில் செய்த வேலை இப்போது வினையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இளைஞர் பரிதாப மரணத்தை தழுவினார். இது போல மேலும் பல மரணங்கள் வந்து கொண்டிருப்பதாக வைத்தியர் கூறுகிறார்.

தற்போது இதற்காக சிகிச்சை பெறும் இளைஞர் ஒருவர் கூறும்போது அன்று அதை பாவிக்க ஆரம்பித்தபோது இப்படி ஆபத்து வருமென யாரும் கூறவில்லை. இப்போதுதான் விளைவை கண்டுள்ளோம் என்று வருத்தத்துடன் கூறுகிறார். மிக மிக ஆபத்தானது நிறுத்துங்கள் என்கிறார்.

இப்போது இளைஞர்கள் பாடிபில்ட் செய்கிறோம் என்று அலைகிறார்கள்.. அவர்களுடைய கைகள் இயல்புக்கு மாறாக பெருத்திருந்தால் இப்படி ஏதாவது எண்ணையை ஏற்றுகிறீர்களா என்று விசாரிக்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் பெற்றோர் கடமையாகும்.

ஏனென்றால் இது உயிர் கொல்லி..

இதுபோல படிப்பறிவற்ற பல தமிழக நடிகர்களும் இந்த வேலையை செய்துள்ளனர் அவர்களுக்கு இதை யார் சொல்வதெனத் தெரியவில்லை.

இந்த செயற்கை மசில்ஸ் திடீரென கல்லுப்பற்றும்..

இயற்கையான உணவு தேகப்பயிற்சி இவையே சரியான வழி, குறுக்கு வழியில் எதை செய்தாலும் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். மோட்சத்தைக் கூட குறுக்குவழியில் அடைய முடியாது என்பதை புரியவேண்டும்.

அலைகள் 20.01.2019

Related posts