புதிய ஏவுகணைகள் தயாரிக்க முடிவு : அமெரிக்கா அதிரடி

ரஷ்யால சீனாவின் சவால்களை எதிர்கொள்ள புதிய ஏவுகணைகள் தயாரிக்கப்படும்’ என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், ‘பாதுகாப்பு ஏவுகணை மறுஆய்வு’ என்ற அறிக்கை வெளியிட்டது. அதில், அது கூறியிருப்பதாவது: ரஷ்யாவும், சீனாவும் தொலை தூரம் சென்று தாக்கும் பேரழிவு ஏவுகணைகளையும், அதிவேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளையும் தங்கள் ராணுவத்தில் சேர்த்து வருகின்றன. இது தற்போது இருக்கும் ஏவுகணைகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. இவை அச்சுறுத்தலாக உள்ளதால், இதற்கு அமெரிக்கா தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தாக்க வரும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் வலுவான ஏவுகணைகளையும், எதிரிகளின் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பே அவற்றை தாக்கி அழிக்கும் வழிமுறைகளை அமெரிக்கா உருவாக்க வேண்டும். இந்தோ-பசிபிக் மண்டலத்தில் இருந்து அமெரிக்காவை இடம் பெயரச் செய்ய சீனா நினைக்கிறது. சீன ராணுவத்தின் நவீனமயத்தில்…

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்து : 21 பேர் பலி

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து மீட்பு குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மெக்சிகோவின் ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் சிக்கி சுமார் 21 பேர் உயிரிழந்தனர். 71 பேர் காயம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து ஹிடால்கோ மாகாண கவர்னர் ஓமர் பயாத் கூறியதாவது; ஹிடால்கோ மாகாணத்தில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் 21 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்தார். மீட்பு பணிகளை தீவிரமாக நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் ‘கியூ’…

சீக்கிரம் எழுந்து வாங்க கேப்டன்!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் மருத்துவ சிகிச்சையில் இருந்த அதே காலகட்டத்தில் விஜயகாந்த் உடல்நிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதற்காக அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். கருணாநிதி இறந்த நேரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்ததால் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் விஜயகாந்தால் கலந்துகொள்ளமுடியவில்லை. அங்கிருந்தபடியே கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர், சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியதும் நேராக மெரினாவில், கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கம்பீரமாகப் பார்த்தே பழகிப்போன விஜயகாந்த், நடக்கவே சிரமப்பட்டு, பிரேமலதாவின் துணையோடு மெதுவாக நடந்துவந்த காட்சியைக் கண்ட அவரது அபிமானிகள் சோகத்தில் துவண்டார்கள். இந்நிலையில், மீண்டும் உயர் சிகிச்சைக்காக, கடந்த டிசம்பர் 18-ம் தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளனர். அமெரிக்காவில் ஒரு மாத…

மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் மெகா கூட்டணி

பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடிய நிலையில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஒன்றுசேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளனர் என்று மோடி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இம்மாநாட்டை மோடி கடுமையாக…

கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி

கணவன் தன்னுடைய செல்போன் பாஸ்வேர்டைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி, அவரை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார். மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட கணவர் 2 நாட்களுக்குப் பின் உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. டெடி பூர்னமா (26) மற்றும் இல்ஹம் ஹயானி (25) இருவரும் தம்பதியினர். தங்களின் வீட்டில் இருந்த மேற்கூரையை மேலே ஏறிச் சரிசெய்து கொண்டிருந்தார் டெடி. அப்போது ஹயானி, கணவனின் மொபைலை எடுத்து வந்து அதன் பாஸ்வேர்டைக் கேட்டுள்ளார். பாஸ்வேர்டைக் கூற மறுத்துள்ளார் டெடி. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் மனைவி ஹயானியை அடிக்கக் கீழே குதித்தார் டெடி. அதற்குள்ளாக அருகிலிருந்த பெட்ரோல் கேனைத் திறந்து வீசினார் ஹயானி. உடனடியாக லைட்டரையும் கொளுத்திப் போட்டார். உடனடியாக டெடியின் உடலில் தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து டெடி மருத்துவமனையில்…

சென்னையில் களைகட்டும் கலைத் தெருவிழா

வில்லுப்பாட்டு, கானா, ஒப்பாரி, நவீன நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ‘சென்னை கலைத் தெருவிழா’, சென்னையில் தொடங்கி நடந்துவருகிறது. கலைகளின் மூலம் மனித மனங்களை சங்கமிக்கச் செய்யும் நிகழ்வாக, ஊரூர் ஆல்காட் குப்பம் விழா கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் இது சென்னை கலைத் தெரு விழாவாக பிப்ரவரி 10-ம் தேதி வரை வார இறுதி நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்த ‘சென்னை கலைத்தெருவிழா’ கொருக்குப்பேட்டை மார்க்கெட் பகுதியில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. வட சென்னையின் பல பகுதிகளில் ‘புகைப்பட நடைபயணம்’ நடத்தப்பட்டது. புகைப்படக் கலைஞர்கள் நடந்து சென்று பல்வேறு புகைப்படங்களை எடுத்தனர். பெசன்ட் நகரில் ‘கலைக்கூடம்’ குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் கடந்த 16-ம் தேதி நடந்தன. மயிலாப்பூர் ராகசுதா அரங்கில், எண்ணூரைச் சேர்ந்த குழந்தைகளின் வில்லுப்பாட்டு, வியாசர்பாடி முனியம்மாளின்…

எதிர்ப்பு ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் இந்த எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு அவர்கள் காலம் கடந்து விட்டது இது தேர்தல் ஆண்டு என்ற காரணங்களை காட்டுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை தொடங்கிய ஆரம்பத்தில்இ வழிநடத்தல் குழு ஜனாதிபதி முறை ஒழிப்பு தேர்தல் முறை மாற்றம் அரசியல் தீர்வு ஆகிய மூன்று பிரதான இலக்குகளை தீர்மானித்தது. காலப்போக்கில் முதலிரண்டை மட்டும் தீவிரமாக செய்ய முயன்றுஇ அரசியல் தீர்வை தள்ளி வைக்க முயன்றார்கள். ஜே.வி.பியை திருப்தி படுத்த முதலாவது…

பேட்ட விஸ்வாசம் இரண்டும் 300 கோடி வசூல்.. உண்மையா..?

நம்ப முடியவில்லை ஆனால் நம்புவோம்.. ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் 10-ந் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்றும், எனவே ஒரு படத்தை சில நாட்கள் தள்ளி வெளியிடும்படியும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை ஏற்காமல் இரண்டும் ஒன்றாக திரைக்கு வந்தன. இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. தொடர்ச்சியாக விடுமுறை இருந்ததால் ஒரு வாரத்துக்கு தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆக நிரம்பின. பேட்ட படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியானது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் 2 படங்களையும் திரையிட்டனர். இரண்டு படங்களும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு படங்களும் ரூ.200 கோடிக்கு…

வில்லன் வேடத்தில் அக்‌ஷய்குமார்?

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும், இளமையாகவும் வருகிறார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரிடம் பேசி வருகிறார்கள். இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தார். இதனால் வட இந்தியாவிலும் படம் நல்ல வசூல் பார்த்தது. இந்தியன்-2 படத்தில்…

இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி

புதிய படமொன்றில், இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில், இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்தப் படத்துக்காக 150 வருடம் பழமை வாய்ந்த சர்ச் செட் ஒன்று போடப்பட இருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை எனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தப் படம், சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சினை பற்றியும் பேசுகிறது. மார்ச் மாதம்…