உலக வங்கித் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி பெயர் பரிசீலனை

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க வாழ் இந் தியரான இந்திரா நூயியின் பெயர் பரிந்துரைக்கப்பட் டுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இவரது பெயரை அமெரிக்க அதிபரின் மூத்த மகள் இவாங்கா ட்ரம்ப் பரிந் துரைத்துள்ளதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள் ளது.

பெப்சி நிறுவனத்தின் தலை வர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார் நூயி. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் தலைவராக இவர் இருந்தார். 63 வயதாகும் நூயி, தற்போது இவாங்கா ட்ரம்ப்பின் ஆலோ சனைக் குழுவில் உள்ளார்.

உலக வங்கித் தலைவர் பொறுப்புக்கு உரியவர்களை பரிந்துரைக்கும் குழுவில் இவாங்கா ட்ரம்ப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இப்பதவிக்கு உரிய நபர்களை பரிசீலிக்கும் பணிகள் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளன. இருந்தாலும் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதிபர் ட்ரம்ப்பிடம் விடப்படும்.

இருந்தாலும் இந்திரா நூயி பற்றி தனது ட்விட்டர் பதிவில் அவர் மிகச் சிறந்த ஆலோசகர், சிறந்த முன்மாதிரியாகத் திகழ்பவர் என்று இவாங்கா ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் தற்போதைய தலைவராக உள்ள ஜிம் யோங் கிம், தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.

Related posts