அலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.01.2019 வெள்ளிக்கிழமை

01. உங்கள் சுயாபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உங்கள் சுற்றுப்புற சூழலை மாற்றியமையுங்கள். உங்களை எவ்வாறு வெளிக்காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களோ அவ்வாறே வெளிக்காட்டுங்கள்.

02. சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட தற்பெருமை எப்போதும் தனிமனிதருடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அது ஆணவமாக மாறிவிடக்கூடாது. அவ்வாறு திசைமாறி பலர் தங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணவம் என்பது பைத்தியக்காரத் தனமாக மற்றவரை வலுக்கட்டாயப்படுத்தும் செயலாகும்.

03. தற்பெருமையை வெளிப்படுத்தும் போது…
எதுவுமே மிகவும் குறைவாகவும் வேண்டாம் அதுபோல எதுவுமே கூடுதலாகவும் வேண்டாம் என்ற வாசகத்தை மனதில் பதியுங்கள்.

04. துடிப்பாக பணிபுரிந்த மனிதர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பணியின்றி முடங்கிக் கிடக்கும்போது முடமாகிப்போகிறார்கள்.

05. மனிதர் உடல்ரீதியாக முதிர்ச்சி பெற 20 வருடங்கள் போதுமானவை. ஆனால் மனம் தற்பெருமை முதிர்ச்சியடைய முப்பது முதல் அறுபது ஆண்டுகள் ஆகும். பொதுவாக மனிதர்கள் தமது ஐம்பதாவது வயதில்தான் செல்வத்தையும் புகழையும் அடைவார்கள்.

06. தற்பெருமை என்கின்ற விஷயம் சுய கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் அதற்கு தன்னம்பிக்கை தேவைப்படுகிறது.

07. திட்டமிட்ட தெளிவான நோக்கம். முறையான செயற்திறன், கற்பனை வளம், துல்லியமாக முடிவெடுக்கும் திறமை போன்றவை இருந்தால்தான் செல்வத்தையும், செல்வாக்கையும் பெருமளவு திரட்ட முடியும்.

08. ஒருவனுடைய எண்ணம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்க வேண்டும் என்று பிரபஞ்சம் கருதுவதில்லை. எண்ணம் என்ற பழக்கத்தால் பிரபஞ்சம் உங்கள் வாழ்வை நெய்து செல்லும்.

09. ஒரு மனிதனின் வெற்றி, தோல்வி, செல்வம் அல்லது வறுமை, இணக்கமான நிலை அல்லது ஏமாற்றம் போன்ற அனைத்துமே பிரபஞ்ச இயக்கவிதியால்தான் தீர்மானிக்கப்படுகின்றன.

10. வானத்தில் நட்சத்திரங்களும் கிரகங்களும், தத்தம் இடத்தில் இருந்து சுழன்று செயற்படுவதற்கு இந்த பிரபஞ்ச இயக்கவிதிமுறைதான் காரணமாக இருக்கிறது.

11. மனிதனின் பழக்க வழக்கங்களால் இயற்கை சக்தி அவனை கட்டுப்படுத்துகிறது. அவன் சிந்திக்கும் வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.

12. மனதில் ஏற்படும் அலட்சிய காரணங்களால் மனிதன் சூழ்நிலையின் பிடியில் சிக்குண்டுவிடுகிறான்.

13. மனிதனின் சுற்றுச் சூழல் மற்றும் மனதில் உள்ள எண்ணங்களின் வேகம் போன்றவற்றின் துணையோடு சேர்ந்து, பிரபஞ்ச இயக்கவிதி பணியாற்றுகிறது. அதற்கேற்ப வெற்றி தோல்வி படிகளை அது உருவாக்குகிறது.

14. தனிமனித சாதனை என்ற கோட்பாட்டின் உச்சமான விஷயமாக இந்த பிரபஞ்ச இயக்கவிதிமுறை இயங்குகிறது.

15. இயற்கைக்கு எந்த மாற்றுவழியும் கிடையாது ஆகவே அதை அனுசரித்து நடப்பது மிகவும் அவசியம்.

16. நீங்கள் உங்கள் சொத்தை வைத்து மதிப்பிடப்படுவதில்லை மாறாக என்ன குணாம்சம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுகிறீர்கள்.

17. உங்களை பாதுகாக்க 17 அதிகாரிகள் இருக்கிறார்கள் அவைகளே மாஸ்டர் மைன்ட் ஆகும்.

01. திட்டமிட்ட குறிக்கோள்
02. தன்னம்பிக்கை
03. சேமிக்கும் பழக்கம்
04. முதன்மைக் குணம்
05. தலைமைத்தகுதி
06. கற்பனைத்திறன்
07. ஆர்வம்
08. சுயகட்டுப்பாடு
09. பெற்ற ஊதியத்திற்கும் அதிகமாக உழைக்கும் குணம்
10. மனம் தரும் ஆளுமை
11. துல்லியமான சிந்தனை
12. மனதை ஒருமுகப்படுத்தும் திறன்
13. ஒத்துழைப்பு
14. தோல்விகளில் இருந்து ஆதாயம் பெறல்
15. சகிப்புத்தன்மை
16. தங்கவிதிமுறை
17. பிரபஞ்ச இயக்கவிதி
இந்த பதினேழு மாஸ்டர் மைன்டுகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

18. இந்த பதினேழு விதிமுறைகளையும் அடக்கியாண்டால் வாழ்வில் எதை அடைய நீங்கள் ஆசைப்பட்டாலும் அதைப் பெற முடியும். உங்கள் திட்டத்தை தோற்கடிக்க யாராலும் முடியாது.

19. இந்த 17 காரணங்களும் படை வீரர்கள் போன்றவை. தயார் நிலையில் நிற்கிறார்கள். யாரைக் கூப்பிட்டாலும் ஓடிவந்து உதவுவார்.

20. வெற்றியும் ஆற்றலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நிற்கின்றன. உங்களிடம் ஆற்றல் இல்லாவிட்டால் செல்வத்தை அடைய இயலாது.

21. இந்த 17 விதிகளிலும் தலைமை அதிகாரி திட்டமிட்ட குறிக்கோளாகும்.

22. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக உங்கள் வாழ்வின் நோக்கத்தை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

23. தங்களுக்கு என்ன வேண்டுமென தெரிந்து கொள்ளாமலே இலட்சக்கணக்கான மக்கள் இந்தப் பூமியில் வாழ்கிறார்கள்.

24. எல்லோருக்கும் நோக்கம் இருக்கிறது. நூற்றுக்கு இரண்டு பேருக்கு மட்டும்தான் திட்டமிட்ட குறிக்கோள் இருக்கிறது.

25. தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து கொண்டு, அதை அடைவதற்கு தன்னை தயார் செய்து கொள்ளும் மனிதனால் முடியாத காரியம் எதுவும் கிடையாது.

அலைகள் 18.01.2019

தொடர்ந்தும் வரும்..

Related posts