உலக நாடகவிழாவில் பங்கேற்ற நாடகம் பரடைசியா நகரில்..

டென்மார்க்கின் பிரபல தமிழ் ஆசிரியை திருமதி சிவகலை தில்லைநாதனின் கைவண்ணத்தில் உருவான மகாராணி என்ற நாடகம் பரடைசியா தியேட்டரில் வரும் 26.01.2019 சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு நடிக்கப்பட இருக்கிறது.

மண்டபத்தின் கதவுகள் நுழைவு சீட்டுக்காக திறக்கப்படும் நேரம் 16.00 மணி நாடகம் ஆரம்பமாகும் நேரம் 17.00 மணி ஆகும்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக நாடகவிழாவில் நடிக்கப்பட்டு சாதனை படைத்த இந்த நாடகம், புறபெஷனல் நாடக வடிவில் அரங்கிற்கு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அனைவரும் உரிய நேரத்திற்கு தவறாமல் சென்று பார்வையிட வேண்டியதும் அவசியமாகும். சுமார் 40 மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இசை, நடிப்பு கொண்ட கலைப்படைப்பாக இது இருக்கிறது.

நுழைவுக்கட்டணம் : 85 குறோணர்களாகும்.

ஐரோப்பாவிலேயே முதன்முறையாக நாடகத்திற்கென்று தனி அரங்கை தெரிவு செய்து வீரத்தமிழ் மணங்கமழ 40 மேற்பட்ட கலைஞர்கள் மேடை ஏறும் வீரத்தமிழிச்சியின் வெற்றி வரலாறு..!
இளயோர்கள் தரமானதாக உங்கள் முன் படைக்க உள்ளார்கள்..!
இதற்கு நீங்கள்தரும் ஆதரவு எதிர்காலத்தில் துணிவுடன் தமது திறமைகளை தரமாக வெளிப்படுத்த உந்து சத்தியாக அமையும்..!
அனைவரும் வந்து அற்புத படைப்பை கண்டு மகிழுங்கள்..!

அலைகள் 18.01.2019

Related posts