தாயகத்தில் நடந்த பொங்கல் விழா மதிவண்டி ஓட்டப்போட்டியில் வழங்கப்பட்டன நூல்கள்

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் மிதிவண்டி ஓட்டப்போட்டி நடைபெற்றது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அறுபது வீரர்களுக்கு உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. நமது தாயக உறவுகளுக்கு ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் வாசிக்கப்படும் அதி சிறந்த புத்தகங்கள், தாயகத்தின் தேவை அறிந்து புதிதாக தாயகத்திற்கு ஏற்ப எழுதப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. தாயகத்தின் புத்தக சந்தை உருவாக்க முயற்சியானது, தாயக எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் புதிய பாதை போட்டுக் கொடுக்கும் அரிய முயற்சியாகும். இந்தப் பணியின் முதற்கட்டமாக உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் இலவசமாக வழங்கப்படுகிறது. பாடசாலைகள், விளையாட்டு வீரர்கள், கழகங்கள் என்று பல தரப்பிலும் வாசிப்பு முயற்சிகளை தூண்டிவிட்டு, சமுதாய அறிவை மேம்படுத்தும் பணிகள் விரிவாக்கப்படுகின்றன. ரியூப்தமிழின் இலங்கை பணிப்பாளர் திருமதி டிவான்யா முகுந்தன்…

உலக நாடகவிழாவில் பங்கேற்ற நாடகம் பரடைசியா நகரில்..

டென்மார்க்கின் பிரபல தமிழ் ஆசிரியை திருமதி சிவகலை தில்லைநாதனின் கைவண்ணத்தில் உருவான மகாராணி என்ற நாடகம் பரடைசியா தியேட்டரில் வரும் 26.01.2019 சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு நடிக்கப்பட இருக்கிறது. மண்டபத்தின் கதவுகள் நுழைவு சீட்டுக்காக திறக்கப்படும் நேரம் 16.00 மணி நாடகம் ஆரம்பமாகும் நேரம் 17.00 மணி ஆகும். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக நாடகவிழாவில் நடிக்கப்பட்டு சாதனை படைத்த இந்த நாடகம், புறபெஷனல் நாடக வடிவில் அரங்கிற்கு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அனைவரும் உரிய நேரத்திற்கு தவறாமல் சென்று பார்வையிட வேண்டியதும் அவசியமாகும். சுமார் 40 மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இசை, நடிப்பு கொண்ட கலைப்படைப்பாக இது இருக்கிறது. நுழைவுக்கட்டணம் : 85 குறோணர்களாகும். ஐரோப்பாவிலேயே முதன்முறையாக நாடகத்திற்கென்று தனி அரங்கை தெரிவு செய்து வீரத்தமிழ் மணங்கமழ 40 மேற்பட்ட கலைஞர்கள் மேடை ஏறும்…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.01.2019 வெள்ளிக்கிழமை

01. உங்கள் சுயாபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உங்கள் சுற்றுப்புற சூழலை மாற்றியமையுங்கள். உங்களை எவ்வாறு வெளிக்காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களோ அவ்வாறே வெளிக்காட்டுங்கள். 02. சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட தற்பெருமை எப்போதும் தனிமனிதருடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அது ஆணவமாக மாறிவிடக்கூடாது. அவ்வாறு திசைமாறி பலர் தங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணவம் என்பது பைத்தியக்காரத் தனமாக மற்றவரை வலுக்கட்டாயப்படுத்தும் செயலாகும். 03. தற்பெருமையை வெளிப்படுத்தும் போது... எதுவுமே மிகவும் குறைவாகவும் வேண்டாம் அதுபோல எதுவுமே கூடுதலாகவும் வேண்டாம் என்ற வாசகத்தை மனதில் பதியுங்கள். 04. துடிப்பாக பணிபுரிந்த மனிதர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பணியின்றி முடங்கிக் கிடக்கும்போது முடமாகிப்போகிறார்கள். 05. மனிதர் உடல்ரீதியாக முதிர்ச்சி பெற 20 வருடங்கள் போதுமானவை. ஆனால் மனம் தற்பெருமை முதிர்ச்சியடைய முப்பது முதல் அறுபது ஆண்டுகள் ஆகும். பொதுவாக மனிதர்கள் தமது ஐம்பதாவது வயதில்தான் செல்வத்தையும் புகழையும்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19: 02

தெளிவான கண். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். மத்தேயு 6:22 முழப் பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பதுபோல என்று ஊரில் உள்ளவர்கள் பழமொழியைச் சொல்லக் கேட்டிருப்போம். பெரிய பூசணிக்காயைச் சோற்றில் புதைக் கலாமா? இதன் அர்த்தம், தவறு என்று தெரிந்தும், அது சரியே என்று சாதித்து பொய்யை உண்மையாக்கி விடுபவர்கள் உண்டு. அவர்களுக்கான பழமொழிதான் நாம் மேலே வாசித்தது. ஆனால் பொய் பொய்யே. தேவனுடைய மகிமைக்கென தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் செய்த தீமையான காரியங்களில் ஒன்று தீமையை நன்மை என்று மாத்திரமல்ல நன்மையை தீமையென்றும் சொல்லி நல் நடத்தையின் தார்ப்பரியத்தையே தலைகீழாக்கிப் போட்டார்கள். இதனை நாம் ஏசாயா 5:20 இல் காணலாம். தீமையை நன்மை யென்றும், நன்மையை தீமையென்றும் சொல்லி…

விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல்

விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்துள்ளதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. ரஜினியின் பேட்ட படத்துடன் சேர்ந்து வெளியானபோதிலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. விஸ்வாசம் ஒரேயொரு மொழியில் மட்டும் ரிலீஸாகி நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

மற்றொரு திசையில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

1880-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை வாழ்ந்த டக்ளஸ் மெக்ஆர்தர் அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இராணுவ தளபதி ஆவார். முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த பெருமைக்குரியவர். தனது வாழ்நாளில் அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளிலிருந்து எண்ணற்ற கவுரவங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். தெருக்கள், திட்டங்கள் மற்றும் விருதுகள் மட்டுமின்றி தங்களது குழந்தைகளுக்கு மெக்ஆர்தரின் பெயரை சூட்டும் அளவிற்கு அமெரிக்க மக்களிடையே இவர் மிகவும் பிரபலமானவராக விளங்கினார். # கடந்த காலத்தை மீண்டும் பெற முயற்சிப்பதில்லை என்பதே நான் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் கசப்பான பாடங்களில் ஒன்று. # எங்களது சிறந்த நாட்டின் பாதுகாப்பிற்காக நான் அக்கறை கொண்டுள்ளேன். # போரில் வெற்றிக்கு மாற்றான விஷயம் வேறு எதுவுமில்லை. # நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு…

உலக வங்கித் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி பெயர் பரிசீலனை

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க வாழ் இந் தியரான இந்திரா நூயியின் பெயர் பரிந்துரைக்கப்பட் டுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இவரது பெயரை அமெரிக்க அதிபரின் மூத்த மகள் இவாங்கா ட்ரம்ப் பரிந் துரைத்துள்ளதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள் ளது. பெப்சி நிறுவனத்தின் தலை வர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார் நூயி. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் தலைவராக இவர் இருந்தார். 63 வயதாகும் நூயி, தற்போது இவாங்கா ட்ரம்ப்பின் ஆலோ சனைக் குழுவில் உள்ளார். உலக வங்கித் தலைவர் பொறுப்புக்கு உரியவர்களை பரிந்துரைக்கும் குழுவில் இவாங்கா ட்ரம்ப் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக வங்கித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இப்பதவிக்கு உரிய நபர்களை பரிசீலிக்கும் பணிகள் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளன.…

கமல் – ரஜினி இணைவார்களா சினேகனின் நீர்த்துப்போன பதில்

ரஜினியுடன் இணைந்து கமல் அரசியல் செய்வாரா என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளர் சினேகன் பதில் அளித்தார். மக்கள் நீதி மய்யத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கவிஞர் சினேகன், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது: ”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து மக்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். மேலும் பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பதை கமல் முடிவு செய்து முறைப்படி அறிவிப்பார். கொள்கை இல்லாத கட்சிகளுடன் கமல் ஒருபோதும் ஒன்றிணைய மாட்டார். ரஜினிகாந்தும் கமலும் இணைந்து அரசியல் களத்தில் நிற்பார்களா? ரஜினிகாந்துடன் கமல் இணைவாரா என்பது குறித்து காலம்தான் முடிவு செய்யும்”. இவ்வாறு சினேகன் தெரிவித்தார்.

சீனமொழியில் பிரதமரின் சுயசரிதை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை நூல் சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. சம்பத் பண்டார என்பவரால் எழுதப்பட்ட அந்த சுயசரிதையை சீனப் பேராசிரியர்கள் வான் யூவும் ஜின் ஷின்யின்னும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள்.சரசவிய பிரசுராலயம் பெயாஜிங்கில் உள்ள யான்சின் பப்ளிசேர்ஸுடன் இணைந்து நூலை பிரசுசித்திருக்கிறது. நூலின் பிரதி இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவரின் சுயசரிதை சீனமொழியில் வெளிவந்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.

மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 09.00 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பெற்றுள்ளார். அண்மையில் சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்ததையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.