பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, அந்நாட்டு தமிழ் மக்களுடன் பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.

தமிழர் திருநாள் பண்டிகையான பொங்கல் தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் எங்கெல்லாம் நிரம்பி இருக்கிறார்களோ அங்கெல்லாம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்தவகையில் சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கலந்து கொண்டார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, ”மகிழ்ச்சிக்குரிய பண்டிகைதான் பொங்கல் பண்டிகை. இன்று தமிழ் சொந்தகளுடன் மர்காம்மில் சிறப்பாக பொங்கல் கொண்டாடினோம். வரவேற்புக்கு நன்றி” என்று ஜஸ்டின் ட்ரூட்டோ தெரிவித்துள்ளார்.

Related posts