பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, அந்நாட்டு தமிழ் மக்களுடன் பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். தமிழர் திருநாள் பண்டிகையான பொங்கல் தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் எங்கெல்லாம் நிரம்பி இருக்கிறார்களோ அங்கெல்லாம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கலந்து கொண்டார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, ”மகிழ்ச்சிக்குரிய பண்டிகைதான் பொங்கல் பண்டிகை. இன்று தமிழ் சொந்தகளுடன் மர்காம்மில் சிறப்பாக பொங்கல் கொண்டாடினோம். வரவேற்புக்கு நன்றி” என்று ஜஸ்டின் ட்ரூட்டோ தெரிவித்துள்ளார்.

பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை

இந்தோனேசியாவின் வடக்கு சுலாவேசி நகரில், பெண் ஆராய்ச்சியாளர் உணவு கொடுக்கச் சென்றபோது, 17 அடி நீளமுள்ள முதலை ஒன்று அவரை உயிருடன் விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. வடக்கு சுலாவேசி நகரில் சி.வி.யோசிகி முதலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் டீசி டுவோ(வயது44) என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணியாற்றி வந்தார். அந்த பண்ணையில் மெரி என்ற முதலை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த முதலை 17 அடி நீளம் கொண்டது என்பதால், மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டதால், 8 அடி தடுப்புச்சுவற்றுக்குள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த முதலைக்கு நேற்றுமுன்தினம் டீசி டுவோ வழக்கம் போல் மாமிச உணவுகளை அளிக்கச் சென்றார். அப்போது திடீரென 8 அடி தடுப்புச் சுவற்றை மீறி பாய்ந்த முதலை, டுவோவின் கைகளைப் பற்றி எழுத்துச் சென்றது முதலையின் வாய்க்குள் டுவோ உடலின் பெரும்பகுதியான…

ரஜினி படத்தின் தலைப்பு ‘நாற்காலி’யா?

ரஜினி நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு 'நாற்காலி' இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இப்படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனிடையே இப்படத்தின் தலைப்பு 'நாற்காலி' என்று செய்திகள் வெளியாகின. பலரும் இந்தத் தலைப்பை வைத்து செய்திகளை வெளியிட்டு வந்தனர். தற்போது இந்தத் தலைப்பு விவகாரம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “ என் அடுத்த படத்தின் தலைப்பு 'நாற்காலி' அல்ல. தவறான வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் இந்த ஆண்டு…

சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் அமோக வரவேற்பு

தமிழினத்தின் காவலனே வருக வருக" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரம்மாண்ட வரவேற்பளிக்கபட்டதுடன் பாராளுட்டு விழாவும் இடம்பெற்றது. இன்று (16) பிற்பகல் 3.30 மணியளவில், வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பருத்தித்துறை நகரில் இருந்து வரவேற்கப்பட்டு, மெத்தக் கடை சிவன் கோவில் பகுதியில் பாராட்டு விழா இடம்பெற்றது. வடமராட்சி பொது அமைப்பினர்கள் மற்றும் இளைஞர்களினால், பருத்தித்துறை நகரப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில், மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள்…

மொழிப் பிரச்சினைகளை ஆராய ஆளுநரால் ஐவர் குழு

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை அந்த செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலேயே இந்த மொழிக் குழு ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மொழிக் குழுவின் தலைவராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இக்குழுவின் உறுப்பினர்களாக…

சுரேன் ராகவனை ஆளுனராக நியமித்தமை ஜனாதிபதியின் சிறந்த தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தினை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்று (15) பிற்பகல் மற்றும் இன்று (16) காலை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மான் கோவில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே விமல தேரர் அவர்களையும், நயினாதீவு விஹராதிபதி வண. நமதகல பத்மகித்தி தேரர் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவனை நியமித்தமையானது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மிகச்சிறந்ததொரு தீர்மானமாவே தான் பார்ப்பதாக குறிப்பிட்ட யாழ்ப்பாணம், நாகவிஹாரை விஹாராதிபதி விமல தேரர்,…

அமர்க்களமாக நடந்தேறியது பட்டப்போட்டி திருவிழா விநோத சமையலறை முதலிடம்

வாடைக்காற்றுக்கு மகிமை கொடுத்த மகத்தான பட்டப்போட்டி.. பொங்கல் நாளுக்கு பட்டங்களால் பெருமை கொடுத்த பட்டப்போட்டி.. ஆனாயத்தில் அழகான கோலங்களை வரைந்த அற்புதமான பட்டப்போட்டி.. தமிழன் பெருமையை வான வெளியில் எழுதி வானுயர்ந்த பட்டப்போட்டி.. ஆடல் பாடல்களுடன் அமைதியாய் முடிந்த அழகிய பட்டப்போட்டி.. உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற ரியூப்தமிழ் இளைஞர்களுக்கு உலகம் வாழ்த்துரைத்த பட்டப்போட்டி.. வவ்வாலும், கொக்குமாக கிடந்த பட்டமேற்றும் வானில் விசித்திரமான பட்டங்களை பறக்கவிட்டு புகழ்மிக்க புதிய வரலாற்றை எழுதிய பட்டப்போட்டி.. போருக்கு பின்னர் மறுபடியும் மீண்டெழுகிறது வல்வை மண் என்ற மகத்துவத்தை பறைசாற்றிய பட்டப்போட்டி..! நாம் சாதிக்க ஏராளம் ஏராளம் புதுமைகள் இருக்கிறது தோழா.. வீணாக ஒரே முறையில் செக்குமாடு போல வாழாது கொஞ்சம் உன் குறுகிய வட்டங்களை விட்டு வெளியே வந்துபார் தோழா..! உனக்காக வானம் கூட அழகான இடத்தை ஒதுக்கிக் காத்திருக்கிறதென…

ரியூப் தமிழ் மிதிவண்டி ஓட்டப் போட்டி 2019 வெற்றி..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரியூப் தமிழ் நடத்தும் மாபெரும் மிதிவண்டி ஓட்டப்போட்டியில் யாரும் எதிர்பாராதவிதமாக பெருந்தொகையாக போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். நல்லூர் ஆலய முன்றலில் தமிழர் கூட்டமைப்பு பா.உ மாவை சேனாதிராஜா அவர்களினால் இந்த போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டு இப்போது கிளிநொச்சி நோக்கி வெற்றிகரமாக போட்டியாளர்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள். பதினேழு வயது முதல் 65 வயது வரை பல்வேறு வயது எல்லையில் போட்டியாளர் வேகமெடுத்துள்ளனர். போருக்கு பிந்திய யாழ். மண்ணில் மக்களிடையே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த இளைஞரிடையே ஒரு வாழ்க்கை நம்பிக்கையை உருவாக்க ரியூப்தமிழ் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி நிகழ்ச்சி மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது. தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலும் இதற்கு பலத்த வரவேற்பு காணப்படுகிறது. போட்டியில் முதலிடத்தை பெற்று 2019ம் ஆண்டின் ரியூப்தமிழ் சாம்பியன் கிண்ணத்தையும் 50.000 ருபா பணப்பரிசையும் ஜி.என்.தர்சிகன் பெற்றுக்கொண்டார். இரண்டாவது இடத்தை…