டென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்

14-1-2018 டென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

ஊடகச்செய்தி

டென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

டென்மார்க் பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும் 14.01.19 அன்று வெகு சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது. தமிழின அடையாள மரபை வெளிப்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்து வாழும் டென்மார்கில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்றலை முன் நிறுத்தி டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் நீண்ட கால முயற்சியின் பலாபலனாக முதல் முறையாக பாராளுமன்றத்தில் தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும் கொண்டாடப்பட்டது.

தமிழர்கள் புத்தாண்டை பாராளுமன்றத்தில் கொண்டாடுவதற்கு டென்மார்க் அரசாங்கம் தொடக்கம் சகல அரசமட்ட அதிகாரிகள் வரை சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தார்கள்.

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று டென்மார்க் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 9 கட்சிகளில் 4 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .மனித உரிமை அமைப்பு மற்றும் குருதிஸ்தான் (kurdistan) மகளிர் அமைப்பும் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அத்துடன் கலாச்சார அமைச்சர் வாழ்த்துச் செய்தியும் அனுப்பி இருந்தார்.இதன் ஊடாக எங்களுடைய கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களையும், நாங்கள் தனித்துவமான இனம் என்பதையும் புத்தாண்டின் ஊடாக வெளிக்காட்டியிருக்கிறோம். அத்துடன் கனடா பாராளுமன்றம் தமிழர் மரபுரிமை மாதமாக அங்கரித்ததோ அதே போல் எங்களுக்கும் டென்மார்க் பாராளுமன்றத்தாலும் அங்கிகாரம் கிடைக்கவேண்டும் என்பதுதான் நோக்கம்.

பொங்கலிலும் புத்தாண்டிலும் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் “தமிழர் திருநாளை” அங்கிகரிக்கவேண்டும் என்று மகஜர் கையளிக்கப்பட்டது. அதை அவர்கள் கலாச்சார அமைச்சரிடம் கையளிப்பதாக கூறியிருந்தார்கள்.

எங்களுடைய கலாச்சார நடனம்,பாடல் ,தைப்பொங்கல் தமிழர் பண்பாடு ஆய்வு நிகழ்வுகளாக நடைபெற்றது. புத்தாண்டில் கலந்து கொண்ட மக்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து கேட்டு,இறுதி முடிவு எடுத்து , அதை நாட்டினுடைய அதியுயர் மன்றத்திற்கு கொண்டு போவதற்கு வேண்டுகோள் வைத்தோம். இன்று இல்லாவிட்டாலும் என்றொரு நாள் நாங்கள் ஒரு தேசிய இனம் என்று அங்கிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தைப்பொங்கல் புத்தாண்டு நாளை நிறைவு செய்தோம்.

இறுதியாக அறுசுவை நிறைந்த பொங்கல் உணவும் வழங்கப்பட்டது.

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

Related posts