மரண அறிவித்தல்-ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்

ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்
(முன்னாள் விற்பனை மேலாளர் Lipton Unilever Brothers)
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை முன்னாள் வதிவிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஜோசப், புஷ்பம் அவர்களின் அன்பு மருமகனும், டெய்சி அவர்களின் அன்பு கணவரும், ஶ்ரீபரதன்(இலண்டன்), மதுமதி(நோர்வே), கஜமதி(சுவிஸ்), ஶ்ரீரமேஷ்(இலண்டன்), ரேவதி(இலண்டன்), சிந்துமதி(டென்மார்க்), பிரகலாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோதை(இலண்டன்), நிக்‌ஷன்(நோர்வே), விஐயகுமார்(ராசு சுவிஸ்), ரஞ்சினி(இலண்டன்), மதியழகன்(இலண்டன்), சிவகுமார்(டென்மார்க்), ஷர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, காலஞ்சென்ற சூரியமூர்த்தி, காலஞ்சென்ற சூரியகாந்தி, மற்றும் சந்திரகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் , பாக்கியலக்சுமி, காலஞ்சென்ற தங்கரத்தினம், காலஞ்சென்ற மார்க்கண்டு, காலஞ்சென்ற அப்பாச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷன், கிஷோர், கௌசல்யன், நான்சி, எரிக், தன்யா, சங்கவி, சாய்ராம், சிவானி, அக்சரன், சஞ்ஜீவ், சஞ்ஜய், ரசிகா, அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றியவிபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்:
ஶ்ரீபரதன் (கண்ணன்) 00447904210683
ஶ்ரீரமேஸ் 00447915380355
ரேவதி 00447505746811

Related posts