நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை பாதிப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சிறைக்குள் இருதய நிபுணர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது மகள் மரியம் நவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அல் அஜீசியா உருக்காலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீஃப் லாகூர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் சிறையில் சென்று அவரைப் பார்த்த அவரது, மகள் மரியம் நவாஸ் தனது தந்தையின் உடல் நிலை சிக்கலானது என்றும் அவரை பரிசோதிக்க அவரது பிரத்யேக மருத்துவர்கள் சிறைக்குள் அனுமதிக்கபடவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சிறை மருத்துவர்கள் நவாஸ் ஷெரீஃபை பரிசோதித்ததாகவும் அவர் நலமாகவே இருப்பதாகவும் சிறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts