யாழில் புற்று நோயாய் பரவிய ஊழலை ஒழிக்க ஆளுநர் முயற்சி அவரால் முடியுமா.?

ஒரு காலத்தில் நேர்மைக்கு பேர்போன மண்ணாக இருந்த யாழ். மண் இன்று ஊழலின் குகையாக இருக்கிறது. வடக்கு மாகாணசபை செயலில் எதுவும் செய்யாது ஊழலில் சாதனை படைத்தது இதற்கு உதாரணம்.

இதுவரை காலமும் தமிழகத்தை ஊழல் என்று பேசிய வடக்கு தமிழர்கள் 30 ஆண்டு போரில் நம்ப முடியாத ஊழலை சந்திக்க என்ன காரணம்..?

முன்னைய ஆளுநர் ஊழல் என்று குரல் கொடுத்தார் ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது வந்துள்ள ஆளுநர் மேலை நாட்டு சிந்தனை உடையவர், சிலவேளை முயற்சிக்க இடமுண்டு.

ஆனால் ஊழல் சிறீலங்கா பராளுமன்றத்தில் இருந்தே உற்பத்தியாவதால் அவரால் யாழ்ப்பாணத்தில் என்னதான் செய்ய முடியும்..?

வெளிநாட்டில் இருந்து யார் காசு அனுப்புவான் எப்படி ஆட்டையை போடலாம் என்ற கலாச்சாரம் அங்கு வளர்ந்துவிட்டது. சமீபத்தில் அடித்த புயலை வைத்து ஆடிய நாடகங்கள் இதற்கு உதாரணம்.

ஆளுநர் குறித்த இன்றைய செய்தி இப்படியுள்ளது :

ஜனநாயகத்தை அடைவதற்கு, ஊழலை அழிக்க வேண்டுமென்பதுடன், ஒப்பந்தங்கள் செய்யக்கூடிய ஆளுமை அவசியம், எனவே, ஊழலை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தை அடைவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு வடமாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பின்னர், நேற்று (09) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் வேண்டு கோள்விடுத்தார்.

எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு ஒரு ஆளுநராக மட்டுமன்றி, விழுந்திருக்கும் தேசத்தை மீள எழ வைக்க வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருக்கின்றது.

நான், இந்த மண்ணின் மைந்தன் இல்லை என்றாலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் கட்டப்படும் பாலத்திற்கான ஒரு அணிலாக இருக்க வேண்டுமென்பதே என்னுடைய எண்ணம்.மூன்று விடயங்கள் தொடர்பில் உரையாற்ற எண்ணியிருக்கின் றேன்.ஜனநாயகத்திற்கு அடிப்படையாக மூன்று விடயங்கள் தேவையாக உள்ளன. அதில் முதலாவதாக, ஒப்பந்தம் செய்யக் கூடிய ஆளுமை எமக்குத் தேவை. ஜனநாயகத்திற்கு அடிப்படையாக ஒரு இலக்கை நோக்கி நாம் முன்நகர இந்த ஆளுமை முதன்மையாக இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி இருக்க வேண்டும். எதை சட்டமாக எடுத்துக்கொள்கின்றோமோ அது தான் சட்டம். சட்டம் ஒவ்வொருவரின் தேவை யைப் பொறுத்தும் மாற்றப்படக்கூடாது.

யுக்திக்கும் சுதந்திரத்திற்குமான தாக்கம் அடிப்படைத் தேவையாக இருப்பது ஜனநாயகத்திற்கு முக்கிய பங்கை வகிக்கின்றது.

இந்தக் காரணங்களுக்கு இருக்க வேண்டிய இரண்டு தீர்வுகளைப் பற்றியும் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும், வடமாகாணத்தில் தமிழ் உச்சக் கட்டமாக பயன்பாட்டில் இருக்கவில்லை என்பது வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கின்றது. உங்களின் உதவியுடன்,உங்களின் ஆலோசனையுடன், ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரசாங்க திணைக்களத்திலும் இரண்டு மொழிகளிலும் பதாதைகள் இருக்க வேண்டுமென்று வேண்டு கோள்விடுத்தார்.

ஊழல் பூச்சிய வீதமாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராட்டம் செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். ஊழல் என்பது வெறும் லஞ்சம் எடுப்பது, பொருட்களை துஷ்பிரயோகம் செய்வது மட்டுமல்ல. தர்ம விரோத செயற்பாடுகள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துக்கொள்ளல் என்பனவும் ஊழலாகவே கணிக்கப்படுகிறது.

அபிவிருத்தி அடைந்தாலும் அந்த அபிவிருத்தியின் பயன்கள் விளிம்பில் இருக்கும் மக்களுக்குச் செல்லாததற்கு காரணம் ஊழலே.

தென் சூடானின் முக்கிய காரணிகளாக ஊழலுக்கு எதிரான காரணிகள் தான் இருந்தன.

ஊழல் என்பது புற்றுநோய் போன்றது. ஆரம்பித்துவிட்டால் எங்கு முடியுமென்று தெரியாது. யார் மீதும் குற்றஞ்சாட்டவில்லை.

Related posts