பட்டப்போட்டி இம்முறையும் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது ரியூப் தமிழ்

வருடம் தோறும் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறும் விக்னேஸ்வரா சனசமூக நிலையம் நடத்தும் தைத்திருநாள் பட்டப்போட்டி 2019 இம்முறை வழமையை விட மேலும் ஒருபடி சிறப்பாக நடைபெற இருக்கிறது.

பொங்கலோ பொங்கல் இது பொங்கல் மகிழ்ச்சி…!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று சூரியப் பொங்கலின் முத்திரை நிகழ்ச்சியாக வரவுள்ள வல்வையின் வினோத விசித்திர பட்டப்போட்டி திருவிழவை கண்டுகளிக்க வல்வை செல்ல முடியவில்லையா..

கவலையே வேண்டாம்.. வல்வை பட்டங்களை உங்கள் வீடுகளில் பறக்கவிட உங்கள் காணொளி இளவரசனாம் ரியூப் தமிழும் இசை இளவரசனாம் ரியூப்தமிழ் எப்.எம்மும் கரம் கோர்த்து தயாராகிவிட்டன.

வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் புதிய சூரியனாக உதிக்கப்போகும் இந்த இசையோடு கலந்த பட்டப்போட்டி நிகழ்வை இம்முறையும் உலகெல்லாம் கொண்டு செல்வது வேறு யாருமல்ல உங்கள் ரியூப்தமிழ்தான்.

நூலிலும் வானிலும் பறக்கின்றன பட்டங்கள் அதை நூலும் இன்றி வாலும் இன்றி உலகமெல்லாம் சுற்றி பறக்க வைக்கப்போகிறது ரியூப் தமிழ்.

யாழ். மண்ணில் இருந்து இருபத்து நான்கு மணி நேரமும் தமிழர் குரலாய், தமிழின இதய நாதமாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ரியூப்தமிழ் எப்.எம்மில் ஒலியாக முழங்க, வல்வையில் இருந்து ரியூப் தமிழ் நேரடி ஒளிபரப்புப் பிரிவு ஒலிஒளி கலவையாக உலகம் முழுவதும் எடுத்து வருகிறது.

வண்ண வண்ண பட்டங்களோ எண்ண எண்ண இனிக்கின்றன.. அவை விண்ணை தொடும் காட்சிகளோ வானத்தில் அழகு கோலமிடுகின்றன.

சின்னச் சின்ன பட்டங்களை ஏற்றிய காலம் போய் நம்ப முடியாத இராட்சத பட்டங்கள் எல்லாம் விண்ணைத் தொடும் காட்சிகள் வல்வை மண்ணில் வருடம் தோறும் சரித்திரம் படைக்கின்றன.

உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.. நீங்கள் எங்கிருந்தாலும் நாங்கள் ஒலி ஒளியாக அங்கு வருகிறோம் பறக்கும் பட்டங்களின் அசைவுகளோடு.

கமேராக்களின் கண்களால் எமது பணியாளர்கள் படம் பிடிக்க, ட்றோன் படப்பிடிப்பு கருவி கருடனாக பட்டங்களோடு பட்டமாக வட்டமிட பக்கத்தில் இருந்து பார்க்கும் போது கிடைக்கும் அதே சுகத்தை வெள்ளித்திரையில் வரும் படம் போல நவீன சாதனங்களால் அள்ளி அள்ளி தர இருக்கிறோம்.

அது மட்டுமா உங்கள் இல்லங்களை எல்லாம் பட்டப்போட்டியும், பாடல் காட்சியுமாக பொங்கலன்று குதூகலிக்க வைக்கப்போகிறது யார் தெரியுமா..?

யாராவது கேட்டால்..

மறந்துவிடாதீர்கள் என்றும் உங்க வீட்டு பிள்ளையாக ஒளியாலும், ஒலியாலும் உறவு கொள்ளும் ரியூப் தமிழ்தான் என்று உரக்கச் சொல்லுங்கள்.

அவ்வளவு மட்டுமா..?

தமிழகத்தில் இருந்து வரும் இசைக்கலைஞர்கள் நம்நாட்டு இசைக்கலைஞர்களுடன் இணைந்து வழங்கும் அரிய இசை நிகழ்ச்சியையும் பார்த்து ரசிக்க வகை செய்கிறோம். இது இல்லம் தோறும் உங்கள் உள்ளம் தோறும் ரியூப் தமிழ் தரும் பொங்கல் பரிசாக ஒளிரப்போகிறது.

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியான ஸீ தமிழின் சரி கம ப வினால் பிரபலம் பெற்ற பாடகர்களான வர்ஷா, ரமணி அம்மாள், ஸ்ரீநிதி, யஸ்கரன் சிங்குடன், இலங்கையின் இசைப்புயல் புகழ் சாரங்கா இசைக்குழுவுடன் உலகப்புகழ் நாத இளவரசன் கே.பி.குமரன் இணைய வரவுள்ள அருமைக்கும் அருமையான பெருமைக்கும் பெருமையான இசை நிகழ்ச்சியையும் பட்டத்தோடு கலந்து, பாலும் தேனும் போல ஆறாக பெருகி ஓடச் செய்யப் போகிறது ரியூப் தமிழ்.

அன்று தமிழ் பெரும் புலவன் நக்கீரனின் நெடுநல்வாடை நம் வாடைக்காற்றை புகழ்ந்தது.. ஒவ்வொரு வீடாக வாடையின் குளிர் உள்ளே போய் வெளியே வந்ததென அவன் பாடுவான். இன்று அதுபோல வாடையில் ஏறும் பட்டத்தை நெடுநல் வாடைபோல உங்கள் இல்லங்களுக்கும் உள்ளங்களுக்கும் சுகமாக கொண்டு வருகிறது ரியூப் தமிழ்.

நீங்களும் காணத் தயாராகுங்கள்..

பட்டத்தால் வானைத் தொடுகிறான் தமிழன்.. அதே பட்டத்தால் உலகத் தமிழரை ஒன்றாக்கி நிற்கிறது ரியூப் தமிழ்.

வானத்தை வளைத்து வில்லாக்கி..
வையத்தை நாணாக்கி..
பட்டங்களை அம்பாக்கி..
நட்சத்திரங்களை வேட்டையாடும்
தமிழ் பெரும் பட்டப்போட்டியில்..
கால் பதிக்கிறது ரியூப் தமிழ்..
கண்ணை பறிக்கட்டும் உங்கள்
காணொளிகள்..

மறந்துவிடாதீர்கள்..

இம்மாதம் 15ம் திகதி இலங்கை நேரம் 14.00 மணிக்கு ஏறுகிறது பட்டங்கள்..

ரியூப் தமிழ் 10.01.2019

Related posts