பட்டப்போட்டி இம்முறையும் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது ரியூப் தமிழ்

வருடம் தோறும் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறும் விக்னேஸ்வரா சனசமூக நிலையம் நடத்தும் தைத்திருநாள் பட்டப்போட்டி 2019 இம்முறை வழமையை விட மேலும் ஒருபடி சிறப்பாக நடைபெற இருக்கிறது. பொங்கலோ பொங்கல் இது பொங்கல் மகிழ்ச்சி...!!! தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று சூரியப் பொங்கலின் முத்திரை நிகழ்ச்சியாக வரவுள்ள வல்வையின் வினோத விசித்திர பட்டப்போட்டி திருவிழவை கண்டுகளிக்க வல்வை செல்ல முடியவில்லையா.. கவலையே வேண்டாம்.. வல்வை பட்டங்களை உங்கள் வீடுகளில் பறக்கவிட உங்கள் காணொளி இளவரசனாம் ரியூப் தமிழும் இசை இளவரசனாம் ரியூப்தமிழ் எப்.எம்மும் கரம் கோர்த்து தயாராகிவிட்டன. வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் புதிய சூரியனாக உதிக்கப்போகும் இந்த இசையோடு கலந்த பட்டப்போட்டி நிகழ்வை இம்முறையும் உலகெல்லாம் கொண்டு செல்வது வேறு யாருமல்ல உங்கள் ரியூப்தமிழ்தான். நூலிலும் வானிலும் பறக்கின்றன பட்டங்கள் அதை நூலும் இன்றி…

தமிழக ஊடகமான இந்துவின் முதல் பார்வை: பேட்ட

ஊட்டி கல்லூரியில் உள்ள ஹாஸ்டல் மாணவர்கள் யாருக்கும் அடங்காதவர்களாக இருக்கின்றனர். இதனால், அந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வருபவர்கள் யாருமே தாக்குப் பிடிப்பதில்லை. இந்நிலையில், அந்த ஹாஸ்டலின் டெம்ப்ரரி வார்டனுக்கான இண்டர்வியூ நடைபெறுகிறது. அந்த வார்டன் வேலையை, காளிக்கு (ரஜினி) கொடுக்கச் சொல்லி மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியிடம் இருந்து மாநிலத் தலைமைக்குப் போன் வருகிறது. அதேமாதிரி ரஜினிக்கு அந்த வேலை தரப்பட, ஹாஸ்டலில் நடைபெறும் அக்கிரமங்களை ஒவ்வொன்றாகக் களையெடுக்கிறார் ரஜினி. திடீரென ஒருநாள் அந்த ஹாஸ்டலில் இருக்கும் முதலாமாண்டு மாணவர் அன்வரைக் (சனந்த் ரெட்டி) கொலைசெய்ய ஒரு கும்பல் வருகிறது. அந்தக் கும்பலிடம் இருந்து சனந்த் ரெட்டியைக் காப்பாற்றும்போது, ரஜினிக்கும் அடிபடுகிறது. அப்படி உயிரைக் கொடுத்துக் காப்பாற்றும் அளவுக்கு ரஜினிக்கும், சனந்த் ரெட்டிக்கும் என்ன சம்பந்தம்? ஹாஸ்டல் வார்டனாவதற்கு முன்பு ரஜினி என்னவாக இருந்தார்? அவர் ஏன்…

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

வன்னியில் இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார். இரசாயன ஆயுதங்கள் சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விடயங்கள் ஒரு அமைச்சிலிருந்து இன்னொரு அமைச்சுக்கு மாற்றப்படுவது தொடர்பில் எமக்கு அக்கறை கிடையாது. எம்மைப் பொறுத்தவரையில் வன்னி இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமைக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும். சர்வதேச சமவாய சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதை ஆராயும் பொறிமுறை ஏதாவது இந்த அரசிடம் உள்ளதா? இன விடுதலைக்கான எமது போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக்கி இந்த அரசு அழித்துவிட்டது. தற்போது எமது மக்களின் அகிம்சாவழி போராட்டம் தொடர்பிலும் இந்த அரசு…

யாழில் புற்று நோயாய் பரவிய ஊழலை ஒழிக்க ஆளுநர் முயற்சி அவரால் முடியுமா.?

ஒரு காலத்தில் நேர்மைக்கு பேர்போன மண்ணாக இருந்த யாழ். மண் இன்று ஊழலின் குகையாக இருக்கிறது. வடக்கு மாகாணசபை செயலில் எதுவும் செய்யாது ஊழலில் சாதனை படைத்தது இதற்கு உதாரணம். இதுவரை காலமும் தமிழகத்தை ஊழல் என்று பேசிய வடக்கு தமிழர்கள் 30 ஆண்டு போரில் நம்ப முடியாத ஊழலை சந்திக்க என்ன காரணம்..? முன்னைய ஆளுநர் ஊழல் என்று குரல் கொடுத்தார் ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது வந்துள்ள ஆளுநர் மேலை நாட்டு சிந்தனை உடையவர், சிலவேளை முயற்சிக்க இடமுண்டு. ஆனால் ஊழல் சிறீலங்கா பராளுமன்றத்தில் இருந்தே உற்பத்தியாவதால் அவரால் யாழ்ப்பாணத்தில் என்னதான் செய்ய முடியும்..? வெளிநாட்டில் இருந்து யார் காசு அனுப்புவான் எப்படி ஆட்டையை போடலாம் என்ற கலாச்சாரம் அங்கு வளர்ந்துவிட்டது. சமீபத்தில் அடித்த புயலை வைத்து ஆடிய நாடகங்கள் இதற்கு…

ரெஜினோல்ட் குரேக்கு புதிய பதவி மீண்டும் ஜனாதிபதி ஆகும் ஆசையில் மைத்திரி

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ———- ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அந்தக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றும், கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வேண்டும் என்பதே என்றும் அவர் கூறியுள்ளார். அது வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே தீர்மானிக்கப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித்…

டென்மார்க் ரயில் விபத்து காவ்றி கமிஷன் விமர்சனம்

டென்மார்க் ஸ்ரோவ பெல்ற் பகுதியில் சென்ற வாரம் தலைநகர் போன விரைவு ரயில்வண்டி இன்னொரு சரக்கு ரயிலுடன் மோதி எட்டுப்பேர் மரணித்தது தெரிந்ததே. இப்போது இந்த விபத்து தொடர்பாக கருத்து வெளியிட்ட காவ்றி கமிஷன் டேனிஸ் அரசுக்கு ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அதாகப்பட்டது.. 2014ம் ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் இடம் பெற்ற சரக்கு வண்டி விபத்தில் ஏற்பட்ட தவறுக்கு இணையான தவறே இங்கும் நடந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறது. இப்படியான தவறு ஜேர்மனி போல இங்கும் நடைபெறும் என்று கருதியிருக்க வேண்டும். ஆகவே சரக்கு ரயில்வண்டிகளை பாவனைப்படுத்த முன் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளுடன் இதையும் சேர்த்து பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்.. மேலும் இதைவிட முக்கியமான இன்னொரு தொழில் நுட்ப செய்தியும் இதில் இருக்கிறது. உலகின் எங்காவது ஓரிடத்தில் ரயில்…

செயட் மன்சூர் விடுதலையாகவில்லை சிறையில் அடைக்கப்பட்டார்

டென்மார்க்கில் இருந்து குடியுரிமை பறிக்கப்பட்டு, மொறோக்கோ நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் செயட் மன்சூர் சிறையில்தள்ளப்பட்டுள்ளார். முன்னைய செய்திகள் விசாரணைகளின் பின்னதாக அவர் நடமாட அனுமதிக்கப்படுவார் என்று கூறியிருந்தன. ஆனால் பிந்தி வந்த செய்திகளோ அவர் விடுதலையாகமாட்டார் சிறையில் தள்ளப்பட்டார் என்கின்றன. அவருடைய சட்டத்தரணி மொறோக்கோவில் இதுதான் நடக்கும், திருப்பி அனுப்பப்படுவோருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருந்தார். அதுபோல மனித உரிமை அமைப்புக்களும் கூறியிருந்தன. இப்போது மொறோக்கோ அரசு அவர்கள் சொன்னபடிதான் நடந்துள்ளது.. ஆனால்... செயட் மன்சூர் விடுதலை செய்யப்படக்கூடிய ஒருவராக காணப்படவில்லை அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பார்த்தால். முதலாவது குற்றம் 2003 ம் ஆண்டு மொறோக்கோவில் உள்ள கஸாபிளாங்காவில் ஒரு தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 பேர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர் படுகாயமடைந்திருந்தனர். இந்த மோசமான குற்றச் செயலுடன்…

றீமா 1000 கடை பார்டி பூல்சருக்குள் இரும்புத்துண்டுகள் எச்சரிக்கை

டென்மார்க்கின் மலிவு விலை கடைத்தொகுதிகளில் ஒன்றான றீமா 1000 கடைத் தொகுதியில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பார்டி பூல்சர் பாக்கட்டுக்களில் உள்ள பூல்சர்களில் அரைத்த இறைச்சியுடன் இரும்புத்துகள்களும் கலந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாக்கட்டுக்கள் டென்மார்க் முழுவதும் உள்ள றீமா 1000 கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரும்புத் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டவுடன் பூல்சர்களை தயாரித்த றய்டன் டிஸ்ரிபியூசன் ஏ.எஸ் உடனடியாக பாக்கட்டுக்களை திருப்பி எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதற்குள் யாராவது இந்த பாக்கட்டுக்களை வாங்கியிருந்தால் அவற்றை வீசி விடுங்கள் இல்லை எந்தக் கடையில் வாங்கினீர்களோ அங்கேயே திருப்பி வழங்கி பணத்தை பெறுங்கள் என்று நுகர்வோர் அமைப்பு கூறுகிறது. அது சரி எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்கிறீர்களா..? இது பார்டி பூல்சர் என்ற பெயரில் 500 கிராம் கொண்ட பாக்கட்டாக இருக்கும். உற்பத்தி செய்யப்பட்ட திகதி 19.12.2018 ஆகும் பாவிக்கக் கூடிய…

சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் பெருவிழா

டென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேரவையின் நிறுவனர் வேலணையூர் பொன்னண்ணா சென்ற ஆண்டு இறைபதம் அடைந்ததினால் அவரை மதிப்பளிக்கும் வகையில் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அரங்கு எனப்பெயர் சூட்டப்பட்ட அரங்கினிலே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன. திரு. திருமதி சங்கரலிங்கம் தம்பதியினர் மங்கல விளக்கேற்ற விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பேரவையின் தலைவர் திரு. செ.சோதிராஜா, திரு. சொ.பேரின்பநாயகம், திரு. வசந்தன் குருக்கள், திரு. கணேசக் குருக்கள் மற்றும் பேரவை நிர்வாகத்தினர் இணைந்து விளக்கேற்ற, பேரவையின் நந்திக் கொடியினை சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் நிறுவனர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் மகன் தாசன் பொன்னண்ணா ஏற்றி வைத்தார். செல்வி அஸ்வியா பிரபாகரனின் தேவாரத்துடன் கொடியேற்றல் நிறைவுற்றதும் பேரவைச் செயலாளர் பகீரதன்…

டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள்

தமிழர் வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு சிறப்பான தைப்பொங்கல் திருநாளானது எமது பண்பாட்டில் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டிய தமிழின அடையாள மரபுகளில் ஒன்று, ஆகையால் அது தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது. அதற்கமையவே தமிழின அடையாள மரபை வெளிப்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்து நாம் வாழும் டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்றலை முன்நிறுத்தி டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் பாராளுமன்றத்தில் வரும் 14.01.2019 திங்கள் அன்று தமிழர் திருநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. கொண்டாடப்பட இருக்கும் தமிழர் திருநாள் எமக்கான சில விடயங்களையும் தாங்கி நிற்கின்றது. அதாவது ஈழத்தில் எமது மொழி, கலை, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பதுடன் எமது நிலத்தையும் அபகரிப்பு செய்து கட்டமைக்கப்பட்ட ஒரு தொடர் இன அழிப்பை சிங்களம் பலமுனைகளில் மேற்கொண்டு வருகின்றது. ஆகையால்…