தமிழன் கதாநாயகனாக இல்லாத இரண்டு படங்களுக்காக மோதல்..!

தமிழன் ஒருவன் கதாநாயகனாக நடிக்காத இரண்டு படங்கள் வருகின்றன.. இந்த படங்களுக்காக தமிழர் திருநாளில் தமிழர்கள் மோதலாம்.. உன்னை என்ன செய்வது தமிழினமே...? ரஜினியின் பேட்ட வெல்லுமா அஜித்தின் விஸ்வாசம் வெல்லுமா என்று தமிழகத்தில் தேர்தல் நடப்பது போல அதிமுகவா திமுகவா என்பது போல புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. ஒரு தமிழன் நடித்த படத்திற்கு மோதுகிறார்களா என்றால் அதுதான் இல்லை.. ஆம் இதுதான் வள்ளுவர் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை. இந்த மோதல்களின் பின்னணி என்ன..? பாமர மக்களின் பணத்தை பறிக்க இந்த சூதாட்டம் ஆரம்பித்திருக்கிறது என்றும் சொல்லக்கூடியளவுக்கு கூத்துக்கள் உள்ளன. இரண்டு படங்களும் தரமுள்ளவையா... பொங்கல் தினத்தில் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்களா என்ற கோணத்தில் பிரச்சாரங்களை முன்னெடுக்காது ரஜினியா இல்லை அஜித்தா என்றுதான் விமர்சனம் கிளம்பியுள்ளது. இதனால் பொங்கலன்று ஒரு நல்ல படத்தை பார்க்கிறோம் என்று…

பேட்ட VS விஸ்வாசம்: வெற்றி யாருக்கு?

ரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். பல திரையரங்குகள் அதிகாலை காட்சிகளை திரையிடுகின்றன. ரஜினிகாந்தைப் பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு திரைப்படம் ஒடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 2.0 ஓரளவு வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்தபடமான பேட்ட ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியாகிறது. இதற்கு முன்பாக 2014ஆம் வருட பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா படமும் அஜீத் நடித்த வீரம் படமும் ஒன்றாக வெளியாகின. அஜீத் நடித்த விஸ்வாசம் படம், அஜீத் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம். இதற்கு முன்பாக வெளியான விவேகம் படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அஜீத் தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானபோது ரசிகர்கள் திகைத்துத்தான்…

மன்னிப்பு கோரியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கனா' வெற்றி விழாவில் பேசிய தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, "இப்போது எல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுறாங்க” என்று குறிப்பிட்டார். உடனே சிவகார்த்திகேயன் எழுந்து கிண்டலாக கொஞ்சம் கீழே வந்துடுங்க என்றார். அதனைத் தொடர்ந்து சத்யராஜ் பேசினார். அப்போது, “இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் யாருக்கெல்லாம் நன்றி சொன்னாங்களோ, அதை அப்படியே ஆமோதிக்கிறேன். அவர் இறுதியாக பேசியதைத் தவிர” என்று…

ரஜினி – அஜித் ரசிகர் மோதல் முன்னரே எழுதப்பட்ட திரைக்கதையா..?

கமல் திரைப்படம் எடுக்கப் போவதாக கனவு காண முன்னரே வழக்கு போடுவதாக செய்தி வருவது போல தமிழகத்தில் திரை வியாபாரத்திற்காக அரசியல், பஞ்ச் டயலக் என்று ஏகப்பட்ட கூத்துக்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில் பேட்ட - விஸ்வாசம் மோதல் வெடித்துள்ளது. தமிழக இளைஞர்களின் பரிதாப நிலை போயும் போயும் இரண்டு நடிகர்களுக்காக மோதல்.. தமிழகத்தை சேராத இரண்டு நடிகர்களின் படத்திற்காக தமிழக இளைஞர்கள் மோதலில் இறங்கியுள்ளதாக பலர் கவலை வெளியிட்டுள்ளனர். இது திரைப்படத்தை விற்க உருவாக்கப்பட்ட போலி நாடகமா இல்லை உண்மையா தெரியவில்லை. திரையரங்கிற்கு ஆட்களை வரவழைத்து பணத்தை சுருட்ட நடக்கும் நாடகமா இல்லையா என்பதை எப்படி கண்டு பிடிப்பது. எல்லோருமே மௌனம் காப்பதால் இது எழுதப்பட்ட திரைக்கதையாகவும் இருக்கலாம். இதுகுறித்த செய்தி இப்படியுள்ளது. : நடிகர் ரஜினி குறித்து அஜித் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ…

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக பிரதமர் தலைமையிலான மீளாய்வு குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் அந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.இந்த விடயம் தொடர்பான சபாநாயகர் விரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் சபையில் கோரிக்கை விடுத்தனர். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியே அவர்கள் இவ்வாறாக கோரிக்கை விடுத்தனர். அதன்போது தனது கருத்தை முன்வைத்த எதிர்க்கட்சி எம்.பியான தினேஸ் குணவர்தன தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு அது பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் தலைமையில் எல்லை நிர்ணயம் தொடர்பான மீளாய்வு குழுவொன்று அமைக்கப்பட்டு அதற்கு இரண்டு மாத காலம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி அந்த குழுவினால் இரண்டு மாதத்திற்குள் அது தொடர்பான அறிக்கையை சபாநாயகருக்கு சமர்ப்பித்து அவரினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி…

கண்டியில் ஏற்பட்ட தீ விபத்து பிள்ளைகளை காப்பாற்றிய தந்தை

கண்டியில் ஏற்பட்ட தீ விபத்து புலம் பெயர் நாடுகளில் முக நூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் பரவியது போல கடையின் தீ கூட பரவியதாகக் கூற முடியாது. ஆளையாள் திருப்பி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.. லைக்குகள் பெற.. கடைகளும், கட்டிடங்களும் தீப் பிடிப்பும், அதை மீட்க தியணைப்புப் படைகளும் இல்லாமல் மக்களே மாடியில் இருந்து பாயும் காட்சி ஆச்சரியத்தை கொடுத்தது. முதலில் வட இந்தியாவில் எங்கோ ஒரு பின்தங்கிய மாநிலத்தில் நடப்பதைப் போல இருந்தது, பின்னரே சிங்கள மொழியில் குரல்கள் கேட்டன. அப்போதுதான் இது சிறீலங்கா என்று தெரிந்தது. முதலில் கட்டிடங்களை இவ்வளவு நெருக்கமாக அமைக்கக்கூடாது.. இரண்டாவது தீயணைப்பு படை வாகனம் போக போதிய வழி காணப்படவில்லை. மூன்றாவது காட்சியை பார்க்கும் நேரம்வரை தீயணைப்பு படை வரவில்லை. கண்டி ஒரு பெரிய நகரம் தீயணைப்பு இப்படியா இருப்பது..? அருகில்…

தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலைவனாக தேர்ந்தெடுத்த மக்கள், தன்மீது கொண்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதைப் போலவே சில வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன என்றும், அதனூடாக பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதை போன்றே தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த வருங்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். லக்கல புதிய பசுமை நகரத்தை நேற்று (08) முற்பகல் மக்களிடம் கையளித்ததன் பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்களின் ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்து சகல இன மக்களும் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்பவும் ஊடக சுதந்திரம், நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை, பக்கச்சார்பற்ற அரச சேவை ஆகியவற்றை கட்டியெழுப்பவும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தவும் கடந்த நான்கு…

புதிய ஆளுநராக சுரேஷ் ராகவன் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட இருக்கும் சுரேஷ் ராகவன் இன்று காலை 10 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே அண்மையில் பதவி விலகிய நிலையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வட மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன் காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந் நிகழ்வினை தொடர்ந்து புதிய ஆளுனரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.