சட்டத்தை ஒரு பாடமாக கொண்டு வர நடவடிக்கை

பாடசாலைக் கல்வியில் சட்டம் ஒரு பாடமாக கொண்டு வருவதற்கு மதிப்பீடுகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காகஅமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமிகு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அன்றாடம் வாழ்க்கைக்குத் தேவையான சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் தேவை அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதற்காக தரம் 6 தொடக்கம் க.பொ.த.சா.தர வரையிலான கற்கைநெறியின் கீழ் பிரஜைகள் கல்வி கற்கை நெறியில் வீதி ஒழுங்குச் சட்டம்,சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்டம்,அடிப்படை உரிமை தொடர்பான சட்டம்,சுற்றாடல் மற்றும் பொது சொத்து தொடர்பான சட்டம்,அடிப்படை குற்றவியல் சட்டம்,ஆட்கடத்தல் தொடர்பான சட்டம்,குறைந்த வயதினரை பலவந்தமாக பாலியியலுக்கு உட்படுத்தும் குற்றம் தொடர்பிலான சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான சட்டம் போன்ற பிரஜைகள் என்ற அடிப்படை ரீதியில் அறிந்துகொள்ள வேண்டிய சட்டம் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக கல்வி நீதி ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள சமர்ப்பித்த ஆவணத்திற்கேஅமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

( சட்டம் படித்தவர் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் என்ற தமிழர் கூட்டணி, தமிழர் கூட்டமைப்பு, தமிழரசு, தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ் கட்சிகளின் கபட ஏமாற்றையும் புதிய தலைமுறை விளங்க இந்த கற்கை உதவலாம். மேலும் ஒரு நாட்டை சட்டம் படித்தவர்கள் ஒன்றுகூடி முன்னேற்ற முடியாது என்பதும், இலங்கையின் தோல்வி இலங்கையில் சட்டம் படித்தவர்களின் தலைமைத்துவ தோல்வியாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதும் இதுவரை வராத ஆய்வு… அதற்கும் இது வழிகாட்டலாம் )

Related posts