ஓடாத படத்துக்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்

ஓடாத படத்துக்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் பேச்சு 'கனா' படக்குழுவினரை அதிர வைத்தது. சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிசம்பர் 21-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அன்றைய தினத்தில் வெளியான 5 படங்களில் 'கனா' படத்துக்கு கணிசமாக திரையரங்குகள் உயர்த்தப்பட்டன. இப்படத்தின் பொருட்செலவுக்கு வந்த வசூல் மிகப்பெரியது என்பதால், வெற்றி விழா கொண்டாடியது 'கனா' படக்குழு. இவ்விழாவில் படு ரகளையாக ஒருவரை ஒருவர் பயங்கரமாக கலாய்த்துக் கொண்டனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் பேச்சின் மூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பலருமே அவரது பேச்சால் கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.…

மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவர்: அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் சற்றுமுன்னர் பாராளுமன்றில் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தல‍மையில் ஆரம்பமாகியது. இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க முடியாதெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சித் தலைவரெனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tweet Del

சட்டத்தை ஒரு பாடமாக கொண்டு வர நடவடிக்கை

பாடசாலைக் கல்வியில் சட்டம் ஒரு பாடமாக கொண்டு வருவதற்கு மதிப்பீடுகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காகஅமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமிகு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அன்றாடம் வாழ்க்கைக்குத் தேவையான சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் தேவை அடையாளங்காணப்பட்டுள்ளது. இதற்காக தரம் 6 தொடக்கம் க.பொ.த.சா.தர வரையிலான கற்கைநெறியின் கீழ் பிரஜைகள் கல்வி கற்கை நெறியில் வீதி ஒழுங்குச் சட்டம்,சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்டம்,அடிப்படை உரிமை தொடர்பான சட்டம்,சுற்றாடல் மற்றும் பொது சொத்து தொடர்பான சட்டம்,அடிப்படை குற்றவியல் சட்டம்,ஆட்கடத்தல் தொடர்பான சட்டம்,குறைந்த வயதினரை பலவந்தமாக பாலியியலுக்கு உட்படுத்தும் குற்றம் தொடர்பிலான சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான சட்டம் போன்ற பிரஜைகள் என்ற அடிப்படை ரீதியில் அறிந்துகொள்ள வேண்டிய சட்டம் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக கல்வி…

என்னிடம் இன, மத, கட்சிப் பேதங்கள் கிடையாது

நான் வாக்குகளுக்காகவும், தேர்தல்களை முன்னிலைப்படுத்தியும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்கள் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றேன். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பிரச்சினை குறித்த வழக்கிற்கு, எட்டு இலட்சம்ரூபா எனக்கு தேவைப்படுகின்றது. நான் நேர்மையாக நடந்துள்ளேன். உண்மையும், சத்தியமும் வெல்லும். என்னிடம் எத்தகைய இன, மத, கட்சிப் பேதங்களும் கிடையாதுஎன மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார். அகில இலங்கை சோனகர் சங்கத்தின் பதுளைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பதுளை அல் - அதான் மகா வித்தியாலயத்தின், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06)பதுளை கிறீன்வூட் உல்லாச விடுதியில் நடைபெற்றது. அந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு…

அவள் டென்மார்க் கலைஞர்களின் குறும்படம்

சில வேளைகளில் ஒரு செய்தியை நாம் பேச வேண்டிய தேவையில்லை.. வார்த்தைகளோ உரையாடல்களோ இல்லாமல் ஒரு முழு நீள திரைப்படத்தின் கதையை குறும்படத்தால் பேசிவிடலாம் என்பார்கள். அதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த குறும்படம். இதன் இயக்குநர் டிலக்ஷன் ஜெயரத்தினம் இன்று சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசை நாடக நடிகராகவும் இருக்கிறார். டேனிஸ் இசை நாடகத்துறையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். இதில் நடித்துள்ள சயன் யோகராஜா முழு நீள திரைப்படமான யாகன் என்ற திரைப்படத்தில் நடித்த சிறந்த கலைஞர். நடனம் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்ட கலை ஆர்வலர். பெண்பாத்திரம் ஏற்று நடித்த டாக்டர் ராகமி ராஜலிங்கம் ஐ.பி.சி நடனப்போட்டியில் டென்மார்க்கில் இருந்து தேர்வாகி இறுதிச் சுற்றுக்கு சென்றவராகும். கலைத்துறையில் நீண்ட காலம் தொடர்ந்து பயணிக்கும் ஒருவர். இவர்கள் இணைந்தால் படைப்பின் தரம் எப்படியிருக்கும் என்பதை…