53 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன ஒருவர் கைது

டென்மார்க் புய்ன் தீவுப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள ஊதின்ச நகரத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது டயானா வெங்கற் என்ற குடியிருப்பு.

மிகவும் அமைதியான நல்ல குடியிருப்புப் பகுதி என்று பெயர் பெற்ற இந்த குடியிருப்பின் நல்ல பெயரை கெடுப்பது போன்ற துயரச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்றிரவு இந்த குடியிருப்புப் பகுதியில் இருந்த கார்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் 53 கார்களின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு பெருந்தொகையாக கார்களை உடைக்க வேண்டிய நோக்கம் என்ன சந்தேகத்தின்பேரில் 28 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரிக்கிறது போலீஸ்.

வரும்காலங்களில் இதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். நடந்துள்ள இழப்பு சாதாரணமானதல்ல.. ஆகவே கண்காணிப்பு கமேராக்களை பொருத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அலைகள் 07.01.2019 திங்கள்

Related posts