டென்மார்க் ரயில்வண்டி விபத்தின் காரணம்தான் என்ன..?

கடந்த புதன் கிழமை டென்மார்க் தலைநகர் போகும் வழியில் பெரிய பாலத்தை அண்டி நடந்த ரயில் விபத்தில் எட்டுப்பேர் மரணித்தது தெரிந்ததே.

இந்த விபத்து எப்படி நடந்ததென ஆய்வு செய்த காவ்றிகமிஷன் தனது அறிக்கையை பரிபூரணமாக உறுதி செய்ய சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இன்று சமர்ப்பித்த யோசனைகள் ரயில் விபத்து நடந்தமைக்கான காரணத்தை விளக்குவதாக இருக்கிறது.

லாரிகளில் இழுத்துச் செல்லப்படும் பின்னால் உள்ள லாரிப் பெட்டியை சரக்கு ரயில் வண்டியில் ஏற்றி இழுத்துவந்து, பின் அவற்றை லாரிகள் இழுத்துச் செல்லும் முறை ஒன்று இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு லாரி பெட்டிகள் ரயில் வண்டியின் இரும்புத்தளத்தில் இறக்கப்படும்போது நடுவில் ஓர் இரும்பு அதில் சரியாக பொருந்த வேண்டும். அப்படி பொருந்தாவிட்டால் பாரிய பிரச்சனை ஏற்படும்.

அன்றைய தினம் நடந்த விபத்தும் இதுபோன்ற கொழுவிச்செல்லப்பட்ட லாரி பெட்டி தளர்வடைந்து திரும்பியதால் ரயிலின் முன்பகுதியில் மோதியது என்றே இதுவரை கருதப்படுகிறது.

ஆகவே வருங்காலங்களில் இப்படியான சரக்கு வண்டிகளில் லாரி பெட்டிகள் பொருத்தப்படும்போது ஒவ்வொரு பெட்டியும் சரியாக பொருந்தியுள்ளதா என்பதை பரிசோதித்து ஓர் அறிக்கை ஒப்படைத்த பின்னரே சரக்கு வண்டி பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளனர்.

தலைநகரில் இருந்து பியர் போத்தல்கள் அடைந்த பெட்டிகளுடன் பரடைசியா நகரில் உள்ள காள்ஸ்பியா தொழிற்சாலை நோக்கி சரக்கு வண்டி வர, 131 பயணிகளுடன் ரயில் வண்டி கன வேகத்துடன் தலைநகர் நோக்கிப் போக..

இரண்டும் ஸ்ரோவ பெல்ற் பாலத்திற்கு அருகருகாக எதிரெதிராக ஓடிய தருணம், பலத்த காற்று வீச சரக்கு வண்டியில் கொழுவியிருந்த முதலாவது பெட்டி சிலாவி மூக்கை நீட்ட அது பக்கமாக போன எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓங்கி கன்னத்தில் அடிக்க விபத்து நேர்ந்திருப்பதை வரைபடங்கள் காட்டுகின்றன.

மேலும் குறித்த இரக சரக்கு வண்டிகளை பாவனைப்படுத்தலாகாது என்றும் ஒரு கருத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வண்டிகள் பாலத்தையண்டி 80 கி.மீ வேகத்திலேயே போக வேண்டும் என்றும் யோசனை வைக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மனிதத் தவறு நடந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் மணக்க ஆரம்பிக்கின்றன..

அலைகள் 07.01.2019 திங்கள் இரவு

Related posts