விஸ்வாசம் நேரம் குறைவு பேட்ட நேரம் கூட 12 நிமிடங்கள் வித்தியாசம்

‘விஸ்வாசம்’ படத்தின் நேர அளவு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களுக்குமே ஜனவரி 10-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இதற்கான திரையரங்குகள் ஒப்பந்தம், விளம்பரப்படுத்தும் பணிகள் என துரிதமாக இரண்டு படக்குழுவுமே இயங்கி வருகிறது.

இதில், ‘விஸ்வாசம்’ படத்துக்கு மதுரை உள்ளிட்ட சில ஊர்களில் அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளது. மேலும், இப்படம் குறித்து திரையரங்கு உரிமையாளர்களே மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

ஏன் என்றால், இப்படம் ஓடும் நேரம் 2:32 நிமிடங்கள் தான். இதனால், 2 மற்றும் 3 திரையரங்குகள் கொண்ட மால்கள் அதிகமான காட்சிகள் திரையிட முடியும். மேலும், ஒற்றை திரையரங்குகளிலும் அதிகமான காட்சிகள் திரையிடலாம். இதனால், வசூல் அதிகமாக இருக்கும் என்பது தான் இதற்கு காரணம்.,

ஆனால், ‘பேட்ட’ படத்தின் ஓடும் நேரம் 2 மணி நேரம் 50 நிமிடத்துக்கு மேல் என்பதால் அதிகமான காட்சிகள் திரையிடுவது சாத்தியமில்லை. இதனால், வசூல் ரீதியில் ‘பேட்ட’ குறையவும் வாய்ப்பு இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

ஜனவரி 10-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் இரண்டு படங்கள் வெளியாவதால், கண்டிப்பாக வசூல் ரீதியில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts