விஜய் மகனின் புதிய அவதாரம்: வைரலாகும் வீடியோ

குறும்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, புதிதாக வீடியோ வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ளார் விஜய்யின் மகன் சஞ்சய்

‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலில் அவரோடு நடனமாடி திரையுலகில் அறிமுகமானவர் விஜய்யின் மகன் சஞ்சய். அதற்குப் பிறகு திரையில் தலைக்காட்டாமல், படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்கசன்’ என்ற குறும்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது, சஞ்சய்யின் புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகும். சினிமாவில் ஆர்வமிருந்தாலும், எப்போது அறிமுகமாகப் போகிறார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில், முதன் முறையாக் வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் விஜய்யின் மகன் சஞ்சய். தனது முதல் பேட்டியாக ‘அரிமாநம்பி’ மற்றும் ‘இருமுகன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ஷங்கரை எடுத்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு யூ-டியூப்பில் வெளியாகி, விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஆனந்த் ஷங்கர் என்பது நினைவுக் கூறத்தக்கது.

நடிப்பு, வர்ணனையாளர் என்பதைத் தாண்டி, சஞ்சய் விரைவில் நாயகனாக அறிமுகமாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆனந்த் ஷங்கரை சஞ்சய் எடுத்துள்ள பேட்டியைக் காண:

Related posts