டி.எம்.சவுந்தரராஜன் என்னை மட்டம்தட்டிப் பேசினார்

டி.எம்.எஸ் - இளையராஜா இருவருக்கும் பொருந்தாது என்று அவ்வப்போது செய்திகள் வந்தது தெரிந்ததே. இளையராஜா தனது ஆட்களை அதிகமாக சினிமா உலகில் புகுத்திவிட்டார் என்று டி.எம்.எஸ் பல இடங்களில் கூறியதாகவும் கதையுண்டு. ஆனால் டி.எம்.எஸ்சும் இளையராஜாவும் உடனடியாக சூடேறும் ஈயக்கம்பிகள் போன்றவர்கள். அதுபோல குளிர்ந்தும்விடுவார்கள். டி.எம்.எஸ் மறந்துவிடுவார் ஆனால் இளையராஜர் மறப்பதில்லை இதுவே இருவருக்கும் வேறுபாடு. இந்த நிலையில் டி.எம்.எஸ் தன்னை அவமதித்தாக இளையராஜா கூறியிருக்கிறார். இதுகுறித்த பேட்டி வருமாறு.. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஜூன் மாதம் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை அவருடைய பவள விழா ஆண்டாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை ராணிமேரி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், இளையராஜா கலந்து கொண்டார். அவரிடம் மாணவிகள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இளையராஜா அளித்த பதில்களும்…

விஜய் மகனின் புதிய அவதாரம்: வைரலாகும் வீடியோ

குறும்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, புதிதாக வீடியோ வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ளார் விஜய்யின் மகன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலில் அவரோடு நடனமாடி திரையுலகில் அறிமுகமானவர் விஜய்யின் மகன் சஞ்சய். அதற்குப் பிறகு திரையில் தலைக்காட்டாமல், படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பாக 'ஜங்கசன்' என்ற குறும்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது, சஞ்சய்யின் புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகும். சினிமாவில் ஆர்வமிருந்தாலும், எப்போது அறிமுகமாகப் போகிறார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், முதன் முறையாக் வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் விஜய்யின் மகன் சஞ்சய். தனது முதல் பேட்டியாக 'அரிமாநம்பி' மற்றும் 'இருமுகன்' படத்தின் இயக்குநர் ஆனந்த் ஷங்கரை எடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவு யூ-டியூப்பில் வெளியாகி, விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த…

விஸ்வாசம் நேரம் குறைவு பேட்ட நேரம் கூட 12 நிமிடங்கள் வித்தியாசம்

'விஸ்வாசம்' படத்தின் நேர அளவு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களுக்குமே ஜனவரி 10-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இதற்கான திரையரங்குகள் ஒப்பந்தம், விளம்பரப்படுத்தும் பணிகள் என துரிதமாக இரண்டு படக்குழுவுமே இயங்கி வருகிறது. இதில், 'விஸ்வாசம்' படத்துக்கு மதுரை உள்ளிட்ட சில ஊர்களில் அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளது. மேலும், இப்படம் குறித்து திரையரங்கு உரிமையாளர்களே மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். ஏன் என்றால், இப்படம் ஓடும் நேரம் 2:32 நிமிடங்கள் தான். இதனால், 2 மற்றும் 3 திரையரங்குகள் கொண்ட மால்கள் அதிகமான காட்சிகள் திரையிட முடியும். மேலும், ஒற்றை திரையரங்குகளிலும் அதிகமான காட்சிகள் திரையிடலாம். இதனால், வசூல் அதிகமாக இருக்கும் என்பது தான் இதற்கு காரணம்., ஆனால், 'பேட்ட' படத்தின் ஓடும் நேரம் 2 மணி நேரம்…

இளையராஜா பேசியதற்கு கங்கை அமரன் பதிலளித்துள்ளார்.

இளையராஜா கல்லூரி விழாவில் பேசியதற்கு கங்கை அமரன் ட்விட்டரில் பதிவிட்டு பதிலளித்துள்ளார். இளையராஜாவின் பிறந்தநாள் விழாவை கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. அவருடைய 75வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகள் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அவரும் அந்த விழாவில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி, பாடி, இசையமைத்து, தன் அனுபவங்களைச் சொல்லி வருகிறார். இந்த நிலையில், சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தன் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டு வந்த இளையராஜா, இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று தெரிவித்தார். இதற்கு இயக்குநரும் இசையமைப்பாளரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கைஅமரன், தன் டிவிட்டர் பக்கத்தில் பதிலாகப் பதிவிட்டுள்ளார். இளையராஜா தெரிவித்தத்தை அப்படியே பதிவிட்டுள்ள கங்கை அமரன், தன்னுடைய…

விவாகரத்து குறுஞ்செய்தியாக பெண்களுக்கு அனுப்பி வைக்கும்.

தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்க, சௌதி அரேபியா புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இன்று (ஞாயிறு) முதல், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கும். இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், `ரகசிய விவாகரத்துகளை` தடுக்கும் என்று உள்ளூர் பெண் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவு, பெண்கள் தங்களின் திருமண நிலை குறித்த முழு விவரத்தை அறிந்திருக்க உதவுவதோடு, ஜீவனாம்சத்திற்கான தங்களின் உரிமைகளை காத்துக்கொள்ளவும் உதவும். கடந்த ஆண்டு, சௌதி அரேபிய பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்ட போதிலும், இன்னும் ஆண்களின் பாதுகாப்பு சட்டத்திற்கு கீழே பெண்கள் இருக்கின்றனர். "இந்த புதிய நடைமுறை விவாகரத்து ஆகும்போது, பெண்கள் தங்களுக்கான உரிமையை (ஜீவனாம்சம்) பெறுவதை உறுதிசெய்யும். மேலும், அவர்களின் விவாகரத்து தவறாக…

அமெரிக்கா ரஸ்யா உளவுப் பிரிவு மோதல் உச்சக்கட்டத்தில்..

அமெரிக்காவுக்கும் சோவியத் ரஸ்யாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்ற காலத்தைப் போல உளவறிய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன. ரஸ்யாவின் பெண்மணியான மரியா புற்றினா என்ற பெண்மணி அமெரிக்காவில் உளவு பார்த்தார். இதன் பொருட்டு பல தரப்பினருடனும் தொடர்பு வைத்திருந்தார், சிறப்பாக அமெரிக்க றைபிள் குழுவுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்துள்ளார். இவர் உறங்கும் உளவாளி என்று வர்ணிக்கப்பட்டு கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் குற்றவாளியாகக் காணப்பட்டு, அமெரிக்காவில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். இப்பெண்மணியிடம் அமெரிக்க விசாரணைப் பிரிவினர் ஏராளம் தகவல்களை கறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரை மேலும் மேலும் சிறையில் வைத்திருக்க முடியாது ரஸ்யாவுக்கு வரவழைக்க வேண்டுமென அந்த நாடு பதட்டமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவை சேர்ந்த போவுல் வெக்லன் என்பவரை ரஸ்யர்கள் கைது செய்து உளவாளி என்று கூறியிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 28ம் திகதி கைதான…

பாரீசில் மஞ்சள் அங்கி அணிந்தோர் போராட்டம் போலீசாருக்கு சரமாரியான குத்துக்கள்.

நேற்று சனிக்கிழமை பாரீஸ் நகரத்தின் இதயப்பகுதியான மந்திரிகள் காரியாலயம் அமைந்த சாம்ஸ் எலிசேய்ஸ் பகுதியில் மஞ்சள் அங்கி அணிந்தோர் ஆர்பாட்டங்கள் வெடித்தன. அப்பகுதியில் தீ வைப்புக்கள் ஆரம்பிக்க மந்திரிகளின் நிர்வாகப் பகுதியில் இருந்த பணியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். தலைநகரில் சுமார் 3500 பேர்வரை ஆர்பாட்டங்களில் குதித்தார்கள், ஆனால் நாடு முழுவதும் சுமார் 50.000 பேர்வரை ஆர்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். எங்கும் தீ மயமாகக் காணப்பட்டது அப்பகுதி. சிறிய இரக ட்றக் வண்டியால் மந்திரிகள் கட்டிடப்பகுதியின் முன்புறம் தாக்கப்பட்டு 15 மஞ்சள் உடைகள் அணிந்தோர் உள்ளே நுழைந்து சன்னல்களை உடைத்தார்கள். இவாகளில் சிலர் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தார்கள். இவர்கள் ஜனநாயக விரோத அணி என்று கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் இப்போது எட்டாவது வாரமாக தொடர்கிறது. வாரவிடுமுறைகளில் மட்டும் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது. இவர்களை ஒன்றிணைப்பதில் முகநூல்கள் முக்கிய பாத்திரம் வகிப்பதாகவும் கூறப்படுகிறது.…