சுதந்திரக் கட்சியிடம் சுமந்திரனின் கோரிக்கை!

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அவசரத்தால், தமிழர்கள் நியாயமான அதிகாரப் பகிர்வை இழக்கநேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலர் தயாசிறி ஜயசேரக தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஊடகங்களில் எனது நண்பர்கள் இருவர் தயாசிறி, டிலான் பெரேரா ஆகியோர் கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த நாட்டில்…

வாழக் கற்றுக்கொள் சுவீடன் புத்தகம் இன்று புதிய சிந்தனைத் தொடர் ஆரம்பம்

இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் இளம் தம்பதியர் பலருக்கு வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்வதென்பது கடினமாகவே இருக்கிறது. அவசர உலகில் நடக்கும் விரைவு மணங்களும் அதைவிட விரைவான மணமுறிவுகளுக்கும் என்ன காரணம்..? புரிந்துணர்வின்மை குடும்ப வாழ்வை ஆரம்பத்திலேயே குலைத்து, பெரும் உளவியல் சிக்கல்களை உருவாக்கியும் வருகின்றது. இந்த நிலையில் இருந்து விடுபட தமிழில் எத்தனையோ அறிவுரை நூல்கள் இருந்தாலும் அவற்றை மேலை நாட்டு வாழ்வில் பயன்படுத்த முடியவில்லை. காரணம் இங்கு வாழ்க்கைச் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. நாம் இந்த இறுக்கமான சூழலை தளர்த்தி, வாழ்வை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு நல்ல டேனிஸ் மொழி நூல் எதிர்பாராதவிதமாக இன்று காலை என் கையில் கிடைத்தது. அதன் பெயர் வாழக் கற்றுக்கொள் என்பதாகும். சுவீடன் நாட்டில் ஓர் இளம் தம்பதியர்க்கு ஏற்பட்ட பிரச்சனையை, அவர்கள் சுயமாக போராடி…