ரஜினிக்கு இன்னும் 5 படங்கள், அதன்பிறகே அரசியல்?

விஜய், அஜித் இருவரும் வசூல் மன்னர்களாக உயர்ந்தாலும் ரஜினிகாந்த்தின் பெயரையும், புகழையும் அவர்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. ரஜினிகாந்த் சினிமாவை விட்டு அரசியல் பக்கம் சென்றால் இருவரில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆக வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கெல்லாம் ரஜினி வழிவிட மாட்டார் போலிருக்கிறது.

அடுத்து, அவர் நடிக்க உள்ள ஐந்து படங்கள் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள். ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினியின் 166வது படத்தை ஏஆர் முருகதாஸ், 167வது படத்தை சுரேஷ் கிருஷ்ணா, 168வது படத்தை கேஎஸ் ரவிக்குமார், 169வது படத்தை கார்த்திக் சுப்பராஜ், 170வது படத்தை எஸ் எஸ் ராஜமவுலி இயக்க உள்ளதாகத் தகவலை பரப்பி வருகிறார்கள். 170வது படம்தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாம்.

அதன் பிறகுதான் அவர் அரசியல் பக்கம் போவார் போலிருக்கிறது. வருடத்திற்கு இரண்டு படம் என்று கணக்கெடுத்தால் கூட 2021ல்தான் அவரால் ஐந்து படங்களையும் நடித்து முடிக்க முடியும். அப்படியென்றால் ரஜினி அரசியலில் நுழைந்தால் அது 2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு இருக்கத்தான் வாய்ப்புள்ளது.

Related posts