அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஏவுகணை சோதனைகள் மற்றும் உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் கூறும்போது, ”அமெரிக்கா கூறுவது போல் ஈரானின் ஏவுகணை சோதனைகள் மற்றும் விண்வெளி தொடரான சோதனைகள் ஆபத்தானவை அல்ல. அமெரிக்கா விதிமீறல் நடவடிக்கையை மீறும் இடத்தில் இருந்து கொண்டு, எந்த ஒரு நாட்டுக்கும் பாடம் எடுக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மை பாம்பியோ வியாழக்கிழமை ஈரானின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறும்போது, ‘‘ஈரான் ஏவுகணை உற்பத்தியை நிறுத்த வேண்டும். பொருளாதாரம் மற்றும் அரசியல் ரிதீயான தனிமைப்படுத்துதலை தவிர்கக ஈரான் ஏவுகணை உற்பத்து மற்றும் சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு தற்போது ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமத் ஜாவத் பதில் அளித்திருக்கிறார்.

ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வருடம் தெரிவித்தார்.

ஆனால், ட்ரம்ப்பின் மிரட்டலைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி ஈரான் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அணு ஆயுத சோதனையைப் பயன்படுத்தும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் அந்நாட்டுடன் எந்த நாடும் கச்சா என்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts