காதலன் புகைப்படத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸான ‘2.0’ படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எமி ஜாக்சன்.

“2019-ம் ஆண்டின் ஜனவரி முதல் நாள். நம்முடைய வாழ்க்கையில் சாகசம் தொடங்கியிருக்கிறது. நான் உன்னைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிக சந்தோஷமான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள எமி ஜாக்சன், காதலர் தன்னை முத்தமிடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இந்த ஜோடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் தற்போது புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடி வருகிறது. எமியின் காதலர் ஜார்ஜ், லண்டனில் தொழிலதிபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts