அரச வேடத்தில் சூர்யா படத்தை இயக்குகிறார் சசிகுமார்.

இப்போது விலை கூடிய அரச படங்களில் நடிப்பதில் முக்கிய நடிகர்கள் ஆசை கொள்கிறார்கள். காரணம் பாகுபலி 2 பெற்ற வெற்றியாகும். அரச படத்தில் தோன்றுவதானால் அதற்கான உடல்வாகு மிக அவசியம். அந்தவகையில் சிங்கம் சூர்யா தனது உடலை பேணி வருகிறார். கட்டையாக இருந்தாலும் அவருக்கும் இந்த ஆசை இருப்பது அதிசயமல்ல. இந்த நிலையில் பிழைக்க எது வழியென யோசித்த சசிகுமாருடைய வரண்ட மண்டையில் திடீரென ஒரு யோசனை தோன்றியது. இவனுகளை உசுப்பேற்றி அரச படம் என்று புறப்பட்டால் நல்ல எமவுண்ட் பார்க்கலாம் என்பதை கண்டு கொண்டார் அவர் தன் குரு பாலாவின் பாணியில் சிந்தித்தார். இதற்காக விஜய்யிடம் போயுள்ளார் அவர் மறுத்துவிட்டார். மறுக்காமல் என்ன செய்வார் ஏற்கெனவே சிம்புதேவனிடம் மாட்டுப்பட்டு புலி வேடம் போட்டு குப்புற விழுந்தவர். மறுபடியும் வேண்டாமப்பா என்று விரட்டிவிட்டாராம். சளைக்காத சசிகுமார் அப்படியே…

காதலன் புகைப்படத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸான ‘2.0’ படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எமி ஜாக்சன். “2019-ம் ஆண்டின் ஜனவரி முதல் நாள். நம்முடைய வாழ்க்கையில் சாகசம் தொடங்கியிருக்கிறது. நான் உன்னைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிக சந்தோஷமான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி” என…

ஜெயலலிதா சிகிச்சை ஓபிஎஸ் என்ன செய்துகொண்டிருந்தார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விவகாரத்தில், அரசு அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் என்ன செய்து கொண்டிருந்தார்? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் முன்வைத்துள்ளது. சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்து மக்கள் மத்தியிலும்,அரசியல் கட்சிகள் மத்தியிலும் சத்தேகங்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தற்பொழுது ஒரு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையம் இது குறித்து விசாரித்துவரும் நிலையில், அமைச்சர்கள் விசாரணையை திசை திருப்பும் வகையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. இரவு பகல் பாராமல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு மனவேதனையையும், அச்சத்தையும் உருவாக்கும் வகையில் அமைச்சர்கள்…

கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள் : விடுதலைபுலிகளா..?

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக நபர் தனது கையிலிருந்து பொதியை தூக்கி எறிந்துவிட்டு ஓடித்தப்பியுள்ளார்.இதையடுத்து பொதியை பார்வையிட்ட பொலிசாருக்கு பேரதிச்சியளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 7.30மணியளவில் புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதையடுத்து அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். பொலிசார் அவரைத்துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் குறித்த பொதியை பொலிசார் பார்வையிட்டபோது…

போலி ஆவணம் : நாமலுக்கு எதிராக விசாரணை

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்தமை மற்றும்பயிற்சியின்போது தப்பிச்சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஊழல் தடுப்பு படையணி எனும் அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) அறிவித்துள்ளது. இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் CID அதிகாரிகள் நீதிமன்றில் இதனை அறிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் நாமல் குமாரவினால் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டுகளையும் (CD) அவர்கள் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கமைய குறித்த ஒலிப்பதிவுகள் தொடர்பில், குரல்களை அடையாளம்…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.01.2019 புதன்கிழமை

01. வெப்ஸ்டர் என்ற அகராதி கூறும்போது : "திரும்பத் திரும்ப மேற்கொள்வதால்தான் பழக்கம் உருவாகிறது என்கிறது" ஒரு பழக்கம் நிலைக்கவும் அதுவே காரணமாகும். 02. ஆசை நிறைவேறுவதற்கான நடைமுறை மார்க்கம் ஒன்று உருவாகும் வரைக்கும் வரை அந்த ஆசை இருந்துகொண்டிருக்க வேண்டும். 03. அந்த ஆசை மீது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அது நிறைவேற முன்னரே நிறைவேறிவிட்டதாக உறுதியாகவும், பூரணமாகவும் திரும்ப திரும்ப நம்ப வேண்டும். 04. நேர்மறையான பழக்கவழக்கங்களை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளும்போது உங்களிடம் மனக்கட்டுப்பாடு, உறுதி, தைரியம், நம்பிக்கை போன்றன உருவாகின்றன. 05. நீங்களாகவே சுயகட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்வது உயர்ந்த மேன்மையான பண்பாக அமையும். அவற்றை உருவாக்கிக் கொள்ளும்போது அவை உங்கள் இலக்கை எட்டித்தொடும் மன உறுதியை தரும். இவை எல்லாம் மனதில் இருந்தே பிறக்கின்றன. 06. திரும்பத்திரும்ப இவற்றை செய்யும்போது…

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டு பெருவிழா

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் 11 வது சைவத்தமிழ் பெருவிழா 2018 வரும் சனிக்கிழமையன்று பி.ப. 14.00 மணிக்கு பரடைசியா நகரில் உள்ள அலே பாடசாலையில் நடைபெற இருக்கிறது. சென்ற ஆண்டு சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் பத்தாவது ஆண்டு விழா நிறைவை சிறப்பாக நடத்திய கவிஞர் வாழ்நாள் சாதனையாளர், சைவப்புனிதர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இப்போது இல்லை. அவருடைய அரங்கில் இந்த விழா நடைபெற இருப்பது சிறப்பாகும். பிரதம விருந்தினராக தத்துவாமிர்த மணி சிவஸ்ரீ வசந்தன் குருக்கள் அவர்களும், சிறப்பு விருந்தினராக சைவச்சிரோன்மணி திரு. சொ. பேரின்பநாயகம் அவர்களும், கௌரவ விருந்தினராக சமூகத்தொண்டர் புரவலர் திரு. சத்தியரூபன் மகாதேவன் (சிவகாமி அறக்கட்டளை - இலண்டன்) கலந்து பெருமை தருகிறார்கள். அத்தருணம் நடனங்கள், நாடகங்கள், தெய்வீககானம், பண்ணிசை, இன்னிசை உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கை சிறப்பிக்கவுள்ளன. கீழே நிகழ்ச்சி…

டென்மார்க்கில் நடந்த ரயில் விபத்தில் ஆறு பேர் பரிதாப மரணம் 16 பேர் படுகாயம்

இன்று அதிகாலை சுமார் 07.30 மணியளவில் இடம் பெற்ற ரயில் வண்டி விபத்தில் ஆறு பேர் மரணமடைந்து 16 பேர் படுகாயமடைந்தனர். ரயில் வண்டியில் பயணித்த 131 பேரில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து டென்மார்க்கின் புய்ன் தீவுப்பகுதியையும் தலைநகர் அமைந்துள்ள சேலன்ட் பிரதான தீவையும் கடல் வழியால் இணைக்கும் ஸ்ரோவ பெல்ற் என்னும் பெயர் கொண்ட பாலத்தை அண்டி நடந்துள்ளது. ரயில் வண்டி நீபோ நகரத்தில் இருந்து புறப்பட்ட சொற்ப நேரத்தில் நடந்துள்ளது. இப்பகுதியில் பாலத்தை வாகனங்கள் கடந்து போகும்போது குறிக்கப்பட்ட ஒரு சிறு தொலைவு சுரங்க பகுதியை ரயில்வண்டி கடந்துபோகும். இத்தகைய ஒரு தருணத்தில் ஓகூஸ் நகரத்தில் இருந்து தலைநகர் போய்க்கொண்டிருந்த ரயில்வண்டியின் மீது அதன் அருகு பக்கத்தில் காணப்பட்ட சரக்கு ரயில் வண்டியில் இருந்த பியர்போத்தல் பெட்டி பறந்துவந்து அடித்தது.…