ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வருவதால் வசூல் பாதிக்கவே செய்யும்

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 10-ந் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். பேட்ட பொங்கலுக்கு வரும் என்று முதலில் அறிவித்ததுமே விஸ்வாசம் தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் பொங்கலுக்கு உறுதியாக வரும் என்று படக்குழுவினர் அறிவித்து விட்டனர். இது இருவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் வசூல் பாதிக்குமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகைகளிலும் சிறிய படங்களை மற்ற நாட்களிலும் வெளியிட விதித்திருந்த கட்டுப்பாட்டை கிறிஸ்துமஸ், பொங்கலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கி விட்டது. பேட்ட, விஸ்வாசம் படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர், "பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒரு வார இடைவெளியில் வந்தால்…

அரசியலில் குதிக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அரசியலுக்குள் வரும் முக்கிய நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிவிட்டநிலையில், இப்போது பிரகாஷ்ராஜும் களமிறங்கியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ், பாஜகவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டவர் என்று தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜவுக்கு எதிராகவும், தீவிர இந்துத்துவாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவ்வப்போது நடிகர் பிரகாஷ்ராஜ் தனது கருத்துகளை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வந்தார். குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட பிறகும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கும் தனது மனப்போக்கைத் தீவிரப்படுத்தினார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…

புத்தாண்டு கொண்டாடி குடிகார தந்தையை தள்ளிவிட்டு கொன்ற மகன்

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய மகனை மது போதையிலிருந்த தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தில் தள்ளிவிட அவர் தலையில் காயம்பட்டு மரணமடைந்தார். முகப்பேர் மேற்குப் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (50). பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு கண்ணகி என்கிற மனைவியும் 3-ம் ஆண்டு பாலிடெக்னிக் பயிலும் நவீன்குமார் (18) என்கிற மகனும், பிளஸ் 1 பயிலும் மகனும் உள்ளனர். நேற்று நவீன் தனது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் வெங்கடேஷ் மது அருந்திவிட்டு உறங்கியுள்ளார். வீட்டுக்கு வந்த மகனை தாய் கண்ணகி கண்டித்து சத்தம் போட்டுள்ளார். அப்போது தாயாருடன் நவீன் வாக்குவாதம் செய்ய சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேஷ் மகனைத் திட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை வெங்கடேஷை நவீன் தள்ளிவிட அவர் கிரில் கேட் மீது விழுந்ததில்…

இலங்கையில் கேட்ட புத்தாண்டு குரல்கள்

01. நீதியோடு கூடிய நிரந்தர அரசியல் தீர்வை தமிழ் மக்கள் பெற வழிவகுக்கட்டும் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார் யாழ். ஆயர் 02. பிறக்கும் ஆண்டில் அனைவருக்கும் நலமும் வளமும் பெருக வாழ்த்துகிறேன் என்று இந்து மத குரு பீடாதிபதி சிவஸ்ரீ தண்டபாணி தேசிகர் கூறுகிறார். 03. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வாக்கிற்கு இணங்க வாழ வாழ்த்துவதாக நல்லை ஆதீனம் பரமாச்சார்ய சுவாமிகள் கூறுகிறார். 04. நீதி சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத ஒரு நாட்டுக்குள் நிரந்தர தீர்வை காண்போம் என்று இரா. சம்மந்தன் தெரிவிக்கிறார். 05. சவால் மிகுந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையப்போகிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தி உள்ளது. 06. ஊழலுக்கு எதிராக புத்தாண்டில் போராடப்போவதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார். 07. நாட்டில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலங்களுக்கு எதிராக…

உலகத்தின் தலைவர்களில் முக்கிய உரையாற்றிய பிரான்சிய அதிபர் மக்ரொங்

உலகத் தலைவர்களில் பிரான்சிய அதிபர் எமானுவல் மக்ரொங்கின் புத்தாண்டு உரை ஊடகங்களில் கூடுதல் கவனத்தைப் பிடித்திருக்கிறது. அவர் தனது உரையில் கூறிய கருத்துக்களின் முக்கியங்கள்.. இன்று நம் கண் முன்னால் நடக்கும் நிதர்சனங்களை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். ஒரு நாட்டை நல்லபடியாக நடத்த வேண்டுமென்றால் நாம் நல்லபடியாக நடக்க வேண்டும். தப்பான வழியில் சென்று நல்ல இலக்கை அடைய முடியாது. நல்லபடி நடப்பதே நல்லதை உருவாக்கும் என்ற உலக யதார்த்தத்தை கண்கொண்டு பார்க்க வேண்டும். இன்றைய உலகம் எப்படிப் போகிறது.. உலக மக்கள் சந்தித்துள்ள சவால்கள் என்ன.. இவற்றுக்குள்ளால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன..? இந்தக் காற்றுக்குள்ளால் நாம் போகக்கூடிய வேகம் இவ்வளவுதான். நமது கனவுகளும் பெருமைகளும் இங்கு முக்கியமல்ல இப்போது நாம் எப்படி வாழ்கிறோம், இந்த சூழலில் நம்மால் எதை செய்ய முடியும்…

டென்மார்க் மகாராணியார் மாகிரதவின் புத்தாண்டு உரை சொல்வதென்ன..

வழமையாகவே உலகத்தின் தலைவர்களுடைய புத்தாண்டு செய்திகளை எடுத்துக் கொண்டால் டென்மார்க் மகாராணியார் மாகிரதவின் உரை ஜீவனுள்ள உரையாகவும், திரும்பி ஒரு தடவை படிக்க வேண்டிய உரையாகவும் இருக்கும். அதுபோலவே இந்த ஆண்டும் உலகத் தலைவர்களின் புத்தாண்டு உரைகளில் டேனிஸ் மகாராணியாரின் உரையும், பிரான்சிய அதிபர் எமானுவல் மக்ரொங்கின் உரையும் கூடுதலாக ஊடகங்களில் முன்னுரிமை பிடித்துள்ளன. நாம் வாழும் டென்மார்க் நாடு என்பதற்காக அல்ல.. அவருடைய உரையின் சாராம்சம் உண்மையாகவே மக்கள் கவனத்தை தொட்டிருந்ததை மறுக்க முடியவில்லை. அந்தவகையில் அவர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு சொன்ன கருத்துக்கள், டென்மார்க் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல உலகப் பிள்ளைகள் அனைவருக்குமே பயனுள்ளதாக அமைந்தது. பிள்ளைகளே நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறோம் என்பது முக்கியமல்ல.. நீங்கள் எந்த இலக்கை தொட்டீர்கள் என்பது முக்கியமல்ல.. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் யார் என்பதை இந்த உலகிற்கு அடையாளப்படுத்துவதே முக்கியம்..!…

2018ம் ஆண்டில் நடந்தது என்ன உலகை சுற்றிய பார்வை

ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் வரும் 18 வது ஆண்டு அந்த நூற்றாண்டின் வரலாற்றின் மிக முக்கியமான ஆண்டு என்று கூறுவார்கள். எப்படி 18 வயதில் இருந்து விடைபெறும் ஓர் இளைஞன் முழுமை மனிதனாகிறானோ, அது போல ஒவ்வொரு நூற்றாண்டிலும் பூமியும் முழுமை மனிதனாகும் நிறைவு ஆண்டு 18 எனலாம். சென்ற நூற்றாண்டின் முதல் 18 வருடங்களுடன் ஒப்பிட்டால் இந்த நூற்றாண்டின் முதல் 18 வருடங்களும் அசுர வேகமானவை என்றே கூற வேண்டும். கிறிஸ்துவிற்கு பின் வந்த 19 நூற்றாண்டுகளிலும் உலகம் அடைந்த முன்னேற்றத்தைவிட பல மடங்கு அதிக முன்னேற்றத்தை அடைந்த நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு என்றார்கள். ஆனால் கடந்த போன 20ம் நூற்றாண்டுடன் ஒப்பிட்டால், கடந்த 18 வருடங்களில் உலகம் அடைந்த முன்னேற்றம் அபாரமானது. இருபதாம் நூற்றாண்டில் எவருமே முன்னெதிர்வு கூறாத அதிசயமானது. நாம் வாயால் கதைத்துக் கொண்டிருக்கிறோம்…