25 நிமிடத்தில் 2 மில்லியன் பார்வைகள் ‘விஸ்வாசம்’

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லருக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 30) பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் இடம்பெற்றுள்ள ‘ஒத்தைக்கு ஒத்த வாடா’ என்று அஜித் பேசும் வசனங்கள் ஆகியவை பொங்கல் விருந்தாக இருக்கும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 12 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளையும், 25 நிமிடங்களில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது சத்யஜோதி நிறுவனம்.

இப்படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். இமான் தயாரித்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

Related posts