மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா

ஹீரோக்களுடன் நான்கு பாடல், காதல் காட்சிகளில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வந்த ஹன்சிகா தற்போது ஒருமுடிவோடு களம் இறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் மஹா படத்துக்காக சாமியார் வேடத்தில் கஞ்சா புகைப்பதுபோல் போஸ் அளித்திருந்தார். இது சர்ச்சையானது. அவர் மீது போலீசில் புகார் அளித்திருப்பதுடன், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் கூறும்போது,’எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்படவில்லை’ என்றார். இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு காட்சியில் ஹன்சிகா முஸ்லிம்பெண்போல் தொழுகை செய்வதுபோல் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன்பின்னணியில் மசூதி, ஹன்சிகா தன்னை தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதுவும் சர்ச்சையாகிவிடுமோ என்பதால் முன்னதாகவே இயக்குனர் ஜமீல் அளித்துள்ள விளக்கத்தில்,’இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் ஹன்சிகா முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். எனவே இப்படிெயாரு காட்சி படமாக்கப்பட்டது. மற்றபடி எந்த மத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை’ என கூறி உள்ளார்.

Related posts