ரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் ..!

பேட்டை படத்தை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படம் முதல்வன் பட பாணியில் உருவாவதாகவும் படத்திற்கு நாற்காலி என்ற பெயர் வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் முருகதாசை தொடர்ந்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அஜித் நடிக்கும் ஒரு ரீமேக் படத்தை இயக்க தயாராகி வரும் வினோத் அடுத்து ரஜினியை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் முதல்முறையாக ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக செய்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் ரஜினியுடன் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி வந்திருக்கிறார் தனுஷ்…

ஆடம்பர பங்களா பிரியங்கா சோப்ராவுக்கு காதலன் பரிசு

பிரியங்கா சோப்ராவுக்கு அவரது வெளிநாட்டு காதலன் ரூ.47 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா பரிசளித்துள்ளார். 2000ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார். பிறகு இந்தி படங்களில் கவனம் செலுத்திய அவர், ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றபோது, அமெரிக்காவில் வசிக்கும் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவருடன் காதல் மலர்ந்தது. சில வருடங்களாக அவர்கள் டேட்டிங் செய்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் நவம்பர் 29ம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பிரியங்கா சோப்ராவுக்கு நிக் ஜோனஸ் ஆடம்பர பங்களா பரிசளித்துள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியிலுள்ள இயற்கை அழகு நிறைந்த பெவர்லி மலைப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களாவில் பெரிய படுக்கை அறை, நீச்சல்…

தீபிகா திருமணம்: பல கோடிக்கு இன்சூரன்ஸ்

நடிகை தீபிகா, ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் கடந்த 2 தினங்களாக தென்னிந்திய மற்றும் வட இந்திய முறைப்படி நடந்தது. இவர்களது திருமணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தபோதும் தீபிகா மற்றும் ரன்வீர் குடும்பத்தினர் திருமணம் முடியும்வரை திகிலுடன் இருந்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு தீபிகா, ரன்வீர் சிங் இருவரும் ‘பத்மாவத்’ படத்தில் இணைந்து நடித்தனர். சரித்திர படமாக உருவான இப்படத்துக்கு வடநாட்டை சேர்ந்த ராஜ்புத் இனத்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதுடன் தீபிகா தலையை வெட்டுவோம் என்றும் ஒரு சிலர் அறிவித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் அனுமதிக்குப்பிறகு வெளியிடப்பட்டது. படம் நன்றாக ஓடி வசூலையும் அள்ளியது. ஆனால் அதில் நடித்த தீபிகா மற்றும் ரன்வீர் குடும்பத்தினர் ஒருவித அச்ச…

ன்னித்தன்மை சான்றிதழ் அனுப்பிய ஹீரோயின்

நடிகை ராக்கி சாவந்த் தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தார். பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்றவர், சமீபகாலமாக சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா மீது ராக்கி சாவந்த் பாலியல் புகார் அளித்தார். தன்னை அவர் தவறாக பயன்படுத்திக்கொண்டார். தனுஸ்ரீ ஒரு லெஸ்பியன் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அவர் மீது தனுஸ்ரீ மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் பெண் பயில்வான் ஒருவர் முன் அவரை கிண்டல் செய்து நடனம் ஆடி முகத்தை பெயர்த்துக் கொண்டார் ராக்கி சாவந்த். மயங்கி விழுந்த ராக்கிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சில தினங்களுக்கு முன் திடீரென்று தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார் ராக்கி. தற்போது தனது வருங்கால கணவர் தீபக்கிற்கு தன்னுடைய…

16 வயது குறைந்த காதலனை கரம்பிடிக்கிறார் சுஷ்மிதா சென்

1994ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தமிழில் பிரவீன்காந்த் இயக்கத்தில் நாகார்ஜூனா ஜோடியாக ரட்சகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், சுஷ்மிதா சென். பிறகு இந்தியில் கவனம் செலுத்திய அவர், மீண்டும் தமிழுக்கு வந்து, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில், ‘ஷக்கலக்க பேபி... ஷக்கலக்க பேபி... லுக்குவிட தோணலையா’ என்ற பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடனம் ஆடினார். தற்போது 43 வயது ஆகும் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனினும் ரெனீ, அலிஷா ஆகிய பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சில மாதங்களாக பாலிவுட் பிரபலம் ரோஹ்மேன் ஷாவல் என்பவருடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்கிறார். இரண்டுபேரும் அவ்வப்போது பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் ஜோடியாக பங்கேற்று வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் தனது காதலை ரோஹ்மேன் சொன்ன…

ரூ.253 கோடி குவித்த சல்மான் கான்

இந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிகம் சம்பாதித்த சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் 100 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ரூ.253.25 கோடி சம்பாதித்து இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சி, விளம்பர படங்கள் மூலம் அவர் இதை சம்பாதித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி இருக்கிறார். அவர் ரூ.228 கோடி சம்பாதித்துள்ளார். ரூ.185 கோடி சம்பாதித்த இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் மூன்றாம் இடத்தில் உள்ளார். கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்த ஆண்டு 13வது இடத்துக்கு சென்றுள்ளார். அவர் ரூ.56 கோடி மட்டும் சம்பாதித்துள்ளார். அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் குறைந்ததே…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா

ஹீரோக்களுடன் நான்கு பாடல், காதல் காட்சிகளில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வந்த ஹன்சிகா தற்போது ஒருமுடிவோடு களம் இறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் மஹா படத்துக்காக சாமியார் வேடத்தில் கஞ்சா புகைப்பதுபோல் போஸ் அளித்திருந்தார். இது சர்ச்சையானது. அவர் மீது போலீசில் புகார் அளித்திருப்பதுடன், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் கூறும்போது,’எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்படவில்லை’ என்றார். இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு காட்சியில் ஹன்சிகா முஸ்லிம்பெண்போல் தொழுகை செய்வதுபோல் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன்பின்னணியில் மசூதி, ஹன்சிகா தன்னை தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதுவும் சர்ச்சையாகிவிடுமோ என்பதால் முன்னதாகவே இயக்குனர் ஜமீல் அளித்துள்ள விளக்கத்தில்,’இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் ஹன்சிகா முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். எனவே இப்படிெயாரு காட்சி படமாக்கப்பட்டது. மற்றபடி எந்த மத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம்…

சிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) இறுதிக்கிரியைகள்

சிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) இறுதிக்கிரியைகள் வரும் சனிக்கிழமை கொல்ஸ்ரபோ நகரில் காலம் சென்ற சிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) அவர்களுடைய இறுதிக்கிரியைகள் வரும் சனிக்கிழமையன்று 29.12.2018 அன்று மு.ப.10.00 முதல் 12.00 வரை கொல்ஸ்ரபோ நகரில் உள்ள sygehus கப்பேலில் நடைபெற இருக்கிறது. முகவரி : Holstebro sygehus kapel Danmarksgade 23 7500 Holstebro இலங்கை யாழ்/கரணவாயை பிறப்பிடமாகவும், டென்மார்க் ஸ்கேயான்,ஸ்ரூவர் ஆகிய நகரங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு சிவகுமார் குமாரவேல் (சின்னக்கண்ணன்) அவர்கள் 20-12-18(வியாழன்) அன்று காலமானார். இவர் காலம் சென்ற திரு திருமதி குமாரவேல் தம்பதிகளின் அருந்தவபுதல்வன் ஆவார். இறுதி கிரிகைகள் : இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரம் அறிய : பாலகுமார் 4530482669 விஜகுமார் 4542300484

சிம்புவால் நஷ்டம் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன்

சிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன் என்று தயாரிப்பாளர் தேனப்பன் காட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை, திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று (டிசம்பர் 24) நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "என் மகன் சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்த படம் ‘மன்மதன்’. அப்படத்தை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில் வெளியிடவும் உரிமை பெற்றுள்ளோம். இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளுக்கான டப்பிங் உரிமையை விற்க முடிவு செய்தேன். ஆனால், திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் வேண்டுமென்றே ‘மன்மதன்’, ‘வல்லவன்’ திரைப்படங்களை விற்க விட மாட்டேன் என்று மிரட்டினார். இந்த 2 படங்களின் டப்பிங் உரிமையை வாங்கி இருப்பதாக தயாரிப்பாளர் தேனப்பன், எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்…

3 சாதி ஆண்கள் மட்டுமே மெய்க்காவலர் படைக்குத் தேர்வு

ஜாட்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள் என 3 சாதிகளில் இருந்து மட்டுமே குடியரசுத் தலைவரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசும் ராணுவத் தலைவரும் வரும் மே 8-ம் தேதி 2019-ல் பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது.இந்த மனுவை ஹரியாணா மாநிலம், ரிவாரி மாவட்டத்தைச் சேர்ந்த கவுரவ் யாதவ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ''கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி குடியரசுத் தலைவருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படைக்கான ஆள்சேர்ப்பு நடந்தது. அதில் ராஜபுத்திரர்கள், ஜாட்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள் என 3 சாதி ஆண்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நான் ஆஹிர்/ யாதவா வகுப்பைச் சேர்ந்தவன். குடியரசுத் தலைவர் சிறப்புப் பாதுகாப்புப் படைக்குத் தேர்வாக அனைத்து விஷயங்களிலும்…