பிரபஞ்சனின் உடலுக்குதேசிய கொடி போர்த்தி அஞ்சலி

புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி அரசு சார்பில் தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.அதன் பின் பேட்டியளித்த நாராயணசாமி தைரியமாக தனது கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் பதிவு செய்த சிறந்த எழுத்தாளரை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்த சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு புதுச்சேரி அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபஞ்சனின் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை போர்த்தி அரசு மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி நிகழ்வில் அவருடன் திருமாவளவன், புதுச்சேரி எம் பி ராதாகிருஷ்ணன்,எழுத்தாளர் மனுஷ புத்திரன், மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி மறைந்த சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன் தைரியமாக தனது கருத்துக்களை எழுத்தில் பதிவு செய்தவர். புதுச்சேரி வரலாற்றை ஆராய்ச்சி செய்து எழுதியதோடு மட்டுமல்லாமல் கோவலன் கண்ணகி காவியத்தினை எழுதியவர் பல்வேறு கட்டுரைகள் எழுதிய அவர் நம்முடன் இல்லை அவருடைய இழப்பு புதுச்சேரிக்கும் எழுத்தாளர்களுக்கும் பேரிழப்பு. அவரது உடல் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கூறினார்.

அஞ்சலிக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில் ‘‘எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார் என்ற தகவல் தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும்,அவருடைய மறைவு தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பு. தமிழக அரசும் புதுச்சேரி அரசும் அவரது நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

அஞ்சலிக்கு பிறகு எழுத்தாளர் மனுஷ புத்தரன் கூறுகையில் ‘‘பிரபஞ்சன் தமிழ் பண்பாட்டின் அடையாளம்.உயரிய அடையாளமாக திகழ்ந்த தனது நண்பரை இழந்துள்ளதாகவும், வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்காக தன்னை அர்பணித்தவர் பிரபஞ்சன்.

எழுத்தாளர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கி அவர் இளம் எழுத்தாளர்களால் கொண்டாடப்பட்டவர் எழுத்தாளரை என்றென்றும் கொண்டாட வேண்டும் எழுத்தாளர்களை எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக புதுச்சேரி மாநில அரசு உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தற்கு நன்றி. இதே போன்று அனைத்து மாநில முதலமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிரபஞ்சனின் உடல் மாலை 4 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் சன்யாசிதோப்பில் எரியூட்டப்படுகிறது

Related posts