கற்விக் விமான நிலையப் பிரச்சனை இரண்டு பேர் சந்தேகத்தில் கைது

இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கற்விக்கில் ட்றோன் எனப்படும் சிறிய இரக தானியங்கியில் இயங்கும் விமானங்கள் பறந்த விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைதாகியிருக்கிறார்கள்.

விமானம் இறங்கும் ஓடுபாதையில் இரண்டு ட்றோன் பறக்கும் கருவிகள் சுமார் 50 தடவைகளுக்கு மேல் பறந்துள்ளன. இதனால் கடந்த புதன் முதல் வெள்ளிவரை இரண்டு தினங்கள் விமான நிலையம் மூடப்பட்டது.

சுமார் 110.000 பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 700 விமானப்பறப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பல கோடி ஸ்டேளிங்பவுண்ஸ்கள் நஸ்டம் ஏற்பட்டிருக்கும். இன்னமும் நஷ்ட விபரம் வரவில்லை.

இது விளையாட்டு செயயல் அல்ல மன்னிப்புக்கு அப்பாற்பட்ட குற்றச் செயலாகும். இத்தகைய கருவிகள் விமானம் இறங்கும் பாதையில் பறப்பது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிரிட்டன் சட்டத்தின்விவகாரம் விமான நிலையங்களை அண்டி ட்றோன்களை பறக்கவிடலாகாது, மேலும் 122 மீட்டர் உயரத்திற்கு மேல் பறக்கவும் கூடாது.

இத்தகைய ட்றோன்கள் இரண்டை பறக்க வைத்து பிரிட்டனின் இரண்டாவது பெரிய வர்த்தக விமானங்கள் பறக்கும் விமான நிலையத்தை இயங்காது தடுத்தவர்களின் நோக்கம் என்ன..?

தொடர்கின்றன விசாரணைகள்.

இவை மோதி விமானம் விழுந்திருந்தால்.. கற்பனை செய்யவே நடுங்குகிறது தேகம்.

அதேவேளை இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் திடீரென பிரித்தானிய அதிரடிப்படைகள் சடசடவென நுழைந்தன. பயணிகள் கப்பலின் மாலுமிகளை சிலர் பணயக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள் என்ற தகவலை அடுத்து அதிரடிப்பாய்ச்சல் நடைபெற்றது.

அடுத்து என்ன நடைபெற்றது.. இதுவரை மற்றைய விபரங்கள் வரவில்லை.

அலைகள் 23.12.2018 ஞாயிறு

Related posts