டென்மார்க் மதி இங்கிலாந்து சென்றாலும் வாழ்ந்த நாட்டை மறவாத மனதுக்காரர்..

சிலர் டென்மார்க்கில் இருந்து இன்னொரு நாடு சென்றால் சென்ற நாட்டு வாழ்க்கைக்குள் அடிபட்டுப் போய்விடுவார்கள். ஆனால் பலர் வெளிநாடு சென்றாலும் டென்மார்க் உணர்வுகளை மறப்பதே இல்லை. அத்தகைய மனிதர்களில் ஒருவர் டென்மார்க் றீய நகரில் சிறந்த சமுதாய சேவையாளராக வாழ்ந்த மதி ஆகும்.

தற்போது அவர் இங்கிலாந்தில் குடும்பத்தினருடன் சிறப்போடு வாழ்ந்து வருகிறார். டென்மார்க்கில் முக்கியமான சம்பவங்கள் நடந்தால் முன்வந்து முக நூலில் வாழ்த்துவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

மதி உயரத்தில் இருப்பதால் அதற்கு உலகத்தில் நடப்பதெல்லாம் முதலில் தெரியும் ஆனால் அருகில் இருக்கும் எமக்கோ தெரிவதில்லை.

அந்தவகையில் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலின் இரண்டாம் பதிப்பு இன்னமும் டென்மார்க் வரவில்லை ஆனால் இலங்கையில் வாங்கி, இங்கிலாந்தில் இருந்து முகநூலில் அதை பதிவிட்டு அசத்தியுள்ளார்.

இதோ அவரின் முகநூல் பதிவு :

உலக புகழ் பெற்ற 10 உதைபந்தாட்டவீரர்கள் – கி செ துரை

தமிழ் என்னும் கடலில் கி செ துரை (செல்லத்துரை மாஸ்டர்)மூழ்கி எடுத்த 35 வது முத்து இன்று என்னை முத்தமிட்டு ஆனந்தம் , பேரானந்தம் அடயச்செய்தது.

இது 16.09.2018 வெளியான இரண்டாவது பதிப்பு என்பதால் இரண்டு முன்னுரைதாங்கி நிற்கிறது. இறுதிபக்கத்தில் தாயகத்து அணியின் புகைப்படம் தாங்கி வந்தது மனதுக்கு மகிழ்வும், புது நம்பிக்கையும் பிறக்கிறது.

” யாழ் நூலகத்தின் எரிந்த சாம்பல் மேட்டில் மலர்ந்திருக்கும் இந்த சரித்திர ரோஜாவை ஒரு இலட்சம் மலராக மலரச் செய்வோம் ”

இதற்கு அமைய இரண்டு மலர்களை பறித்து பாரதிவீதி இளங்கதிர் சனசமூக நிலைய பொன்மணி நூலகத்தில் மணம்பரப்பச்செய்தேன் என்பதில் சிறு மகிழ்ச்சி.

“இவனைப்படி கூடவே நீ யார் என்பதை தேடிப்பிடி”

“நீங்களும் அதுவாகலாம், மற்றவர்களிடம் இல்லாத தனிதுவத்தை வளர்த்துகொள்ளுங்கள்”

இவைகள் வாசகன் உயர்வின் மீது ஆசிரியர் கொண்ட கரிசனை.

பத்துவீர்களின்முடிவிலும் பத்து தத்துவ பாடல்களை புகுத்தி வாசகன் மனதில் நீக்கம் அற நிலைத்திருக்க செய்திருக்கிறார் .
நான் சுவைத்ததை நீங்களும் சுவையுங்கள்அனைவரும் பாருங்கள்.
இது என்ன ?
நாங்கள் எத்தனை மச் பாத்தனாங்கள், இவர்கள் படம் பொறித்த சீருடை போட்டிருக்கிறம். இதை ஏன் வாசிக்க வேண்டும்?
அதற்கான விடை புத்தகத்தில் உண்டு உண்டு உண்டு.!
வாழ்த்தவோ ,பாராட்டவோ வயது அவசியமில்லை. மனமிருந்தால் போதும் .
வாழ்த்துகள், பாராட்டுக்கள்
இன்னுமின்னும் வானுயர் புகழ்பெற்று வாழியநீடு !
அன்புடன்
மதி

Related posts