அம்பானி வீட்டுக் கல்யாணச் செலவு ரூ.28 கோடி

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி – ஆனந்த் பிராமல் கல்யாணச் செலவுகள் விவரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர், பாடகர், நாட்டியத் தாரகை இத்திருமண விழாவில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக வாங்கிய தொகையே ரூ.21 கோடி முதல் ரூ.28 கோடி வரை இருக்கலாமாம்.

திருமணத்துக்கு வரும் விருந்தாளிகளைத் தங்க வைப்பதற்காக மட்டும் ஐந்து ‘5 நட்சத்திர ஓட்டல்கள்’ உதய்பூரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன.

திருமணத்துக்கு வரும் விருந்தினர்களை உதய்பூர் அழைத்து வருவதற்காக வெவ்வேறு நகரங்களிலிருந்து 100 தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு விருந்தினருக்கும் அனுப்பிய அழைப்பிதழுக்கான செலவு ரூ.3 லட்சம் என்று பெரும் பட்டியல் நீள்கிறது. மும்பையின் வொர்லி கடற்கரைப் பகுதியில், புதுமணத் தம்பதியர் குடியிருப்பதற்காகத் தனி பங்களா கட்ட மணமகனின் தந்தை பிராமல், 2012-லேயே ரூ.452.5 கோடியை ஒதுக்கிவிட்டிருந்தாராம்.

Related posts