முதல் படம் ஓடாமல் இருந்தால் நடுத்தெருவில் நின்றிருப்பேன்

எனது முதல் படம் ஓடாமல் இருந்தால் நடுத்தெருவில் நின்றிருப்பேன் என்று நடிகர் தனுஷ் பேசினார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி-2 படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி தனுஷ் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பிடித்த படம் மாரி. இப்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து இருக்கிறேன். மாரி நல்லவனும், கெட்டவனும் இல்லாத கதாபாத்திரம். ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருக்கும். குடும்பத்தோடு ரசிக்கலாம். சாய்பல்லவி, வரலட்சுமி ஆகியோருடன் முதல் முறையாக நடித்ததில் மகிழ்ச்சி. இதில் இளையராஜா ஒரு பாடலை பாடி இருப்பது பெரிய ஆசீர்வாதம். யுவன்சங்கர் ராஜா 3 அருமையான பாடல்களை தந்துள்ளார். அவரை சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தூரத்தில் இருந்து ரசித்து இருக்கிறேன். துள்ளுவதோ இளமை படத்தில் நான் அறிமுகமானேன். அடையாளமே இல்லாத 6 புதுமுகங்களை வைத்து எடுத்தனர். அந்த படத்துக்கு அடையாளம் கொடுத்தது…

மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளராக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அவர் கடந்த நவம்பர் மாதம் இணைந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ சட்டப்படி வகிக்க முடியாது என்று வாதிடப்படுகிறது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று…

அம்பானி வீட்டுக் கல்யாணச் செலவு ரூ.28 கோடி

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த் பிராமல் கல்யாணச் செலவுகள் விவரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர், பாடகர், நாட்டியத் தாரகை இத்திருமண விழாவில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக வாங்கிய தொகையே ரூ.21 கோடி முதல் ரூ.28 கோடி வரை இருக்கலாமாம். திருமணத்துக்கு வரும் விருந்தாளிகளைத் தங்க வைப்பதற்காக மட்டும் ஐந்து ‘5 நட்சத்திர ஓட்டல்கள்’ உதய்பூரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன. திருமணத்துக்கு வரும் விருந்தினர்களை உதய்பூர் அழைத்து வருவதற்காக வெவ்வேறு நகரங்களிலிருந்து 100 தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு விருந்தினருக்கும் அனுப்பிய அழைப்பிதழுக்கான செலவு ரூ.3 லட்சம் என்று பெரும் பட்டியல் நீள்கிறது. மும்பையின் வொர்லி கடற்கரைப் பகுதியில், புதுமணத் தம்பதியர் குடியிருப்பதற்காகத் தனி பங்களா கட்ட மணமகனின் தந்தை பிராமல், 2012-லேயே ரூ.452.5 கோடியை ஒதுக்கிவிட்டிருந்தாராம்.

விஷால் மீதான குற்றச்சாட்டு ஆராய வேண்டும்

விஷால் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய அவர் இடம் கொடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். பொன்.மாணிக்கவேல் மீது அதிகாரிகள் புகார்கள் எழுப்பியுள்ளனர். அதேசமயம், தனக்கு அரசியல் அழுத்தம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளாரே? நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை ஆராய்ந்த பின்புதான் கருத்து சொல்ல வேண்டும். ஒருதரப்புக்கு மட்டும் பாரபட்சமாக கருத்து சொல்ல முடியாது. அரசியல் அழுத்தத்தை மீறிதான் இங்கு பணியாற்ற வேண்டும். வேறு வழியில்லை. தமிழகத்தில் அரசியல் அழுத்தம் நேர்மையாக இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தை மூடியுள்ளது குறித்து... இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் இருக்கிறது. விஷால் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய…

நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட உரையாடல்கள் மீட்பு

நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றவியல் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குறித்த கையடக்க தொலைபேசியிலிருந்து ஒரு சில உரையாடல்கள் அழிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை பெறும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை என்பதன் காரணமாக, வெளிநாட்டிற்கு அதனை கொண்டு சென்று பரீட்சிப்பதற்கு அனுமதி வழங்குமாறு சிஐடி யினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியில் உள்ள அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பிலான தகவல்களை பெறுவதற்கு CID மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் குழு ஒன்று கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி ஹொங்கொங் சென்றிருந்தது. அதற்கமைய…

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – முழு விபரம்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று (20) காலை வழங்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க - தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க - சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா - புத்த சாசனம் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் மங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல - பொது முயற்சியான்மை, மலைநாட்டுப் பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி…