அமலாபாலுடன் கல்யாணம் விஷ்ணு விஷால் ஆச்சர்யம்

விஷ்ணுவிஷால், அமலாபால் இருவரும் ராட்சசன் படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும், திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை விஷ்ணு விஷால் உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் விஷ்ணு விஷால் நடித்துள்ள சிலுக்குவார் பட்டி சிங்கம் படம் வெளியாவதில் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வரும் 21ம் தேதி படம் வெளியிட முடிவானது. இதுகுறித்து விஷ்ணு விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:

சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் கதையை 2 வருடத்துக்கு முன்பே கேட்டிருந்தேன். எழில் இயக்கத்தில் வெளியான வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை, காமெடி டிராக் எழுதிய செல்லா அய்யாவு என்னிடம் சிலுக்குவார் பட்டி சிங்கம் கதை கூறியிருந்தார். ஜாலியான, காமெடி கதையாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். ரெஜினா ஹீரோயின். கெஸ்ட் ரோலில் ஓவியா நடித்துள்ளார். லெயன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் அளித்திருந்தனர்.

ஆனால் ரிலீஸை தள்ளி வைக்கும்படி சிலர் கேட்டனர். அதை ஏற்கவில்லை. வரும் 21ம் தேதி ரெட்ஜெயன்ட் இப்படத்தை வெளியிடுகிறது.
பட வெளியீட்டில் பழைய முறையே பரவாயில்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். பலவீனமானவன் வெளியே போய்விடுவான் என்று நினைக்கிறார்கள். அது தவறு. நான் எனக்காக மட்டும் பேசவில்லை. பாதிக்கப்படும் சின்ன படங்களுக்காகவும் பேசுகிறேன். நியாயத்துக்காக நான் போராடுவேன். இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக விஷ்ணு பேட்டி அளித்த நிலையில் அவரிடம் அமலாபாலுடனான காதல், கல்யாண கிசுகிசுபற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. இதில் ஆச்சர்யம் அடைந்த அவர்,’அமலாபால் கல்யாண கிசுகிசுபற்றி கேட்பீர்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அப்படி யாரும் கேட்கவில்லையே…! என்றார். ஏற்கனவே இதுகுறித்து நீங்கள் (விஷ்ணு)தெளிவான விளக்கம் அளித்தபிறகு அந்த வதந்தி கப் சிப் ஆகிவிட்டது என்று நிருபர்கள் அவருக்கு பதில் அளித்தனர்.

Related posts