ரணில் ஞாயிறு புதிய பிரதமராக பதவிப்பிரமாணம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதியபிரதமர் பதவிப்பிரமாணம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் அமைச்சரவை நியமனம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு…

அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 இலட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனை காரணம் காட்டி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த நிலையில், தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு…

நடிகர் பிரசாந்திற்கு மறுவாழ்வு தருமா ஜானி..?

ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே 'ஜானி'. பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள். சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்படுகிறது. ஆனால், பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மா பாட்ரிக் கொல்லப்படுகிறார். அதற்கடுத்து பிரபு, சாயாஜி ஷிண்டே, ஆனந்த் ராஜ்,…

என்ன சொல்கிறது துப்பாக்கிமுனை திரைப்படம்..

ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே 'துப்பாக்கி முனை'. ராமேஸ்வரம் தீவில் 15 வயது சிறுமியை ஆசாத் ('மிர்ச்சி' ஷா) என்கிற மாவோயிஸ்ட் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆசாத்தை என்கவுன்ட்டர் செய்வதற்காக போலீஸ் அதிகாரி போஸ் (விக்ரம் பிரபு) மும்பையிலிருந்து ராமேஸ்வரம் விரைகிறார். கொலையான சிறுமியின் தந்தை உய்யா (எம்.எஸ்.பாஸ்கர்) விக்ரம் பிரபுவிடம் நடந்தது என்ன? என்பதைச் சொல்கிறார். கோபமும் வேகமுமாக கிளம்பும் விக்ரம் பிரபு என்கவுன்ட்டர் செய்யாமல் அவரைக் காப்பாற்றப் போராடுகிறார். அது ஏன்? சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு யார் காரணம்? துப்பாக்கி தோட்டாக்களில் மட்டுமே பேசும் விக்ரம் பிரபு ஏன் முதன்முறையாக ஒரு குற்றவாளிக்காக மனம் இரங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.…

எல்லைச் சுவர் குறித்து ட்ரம்ப்புடன் பேசவில்லை மெக்சிகோ அதிபர்

எல்லைச் சுவர் குறித்து அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடந்தவில்லை என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ருஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “மெக்சிக்கோ அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஏற்படுத்தவிருக்கும் சுவர் பற்றி ட்ரம்ப்புடன் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை. தொலைபேசியில் இந்த எல்லைச் சுவர் குறித்து பேசவில்லை. அவருடனான உரையாடல் ஒரு மரியாதை நிமித்தமாகத்தான் இருந்தது. அந்த எல்லை சுவர் மக்கள் சட்டத்துக்கு முரணாக நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்பதற்காக உருவாக்கப்பட உள்ளது. இந்த எல்லைச் சுவருக்கு மெக்சிகோவால் முடிந்த நிதியை வழங்குவோம் என்று அமெரிக்காவிடம் கூறினேன்” என்றார். கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில் ஆண்ட்ரஸ் மானுவேல் வெற்றி பெற்றார். மெக்சிகோவில் பல வருடங்களுக்குப் பின்னர், அதிபராக இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரஸ் மானுவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மெக்சிகோவில் அதிக…

பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் ராஜபக்ஷ

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வார் என நாமல் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால தடையுத்தரவொன்றினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 03ஆம் தேதி இந்த இடைக்கால தரையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரம் இல்லை எனத் தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 04.12.2018 வெள்ளிக்கிழமை

உலகப்புகழ் பெற்ற நூல்களில் இருந்து வரும் குறும் தகவல்கள் இருபத்தைந்து.. 01. பழக்கம் என்பது ஒரு கயிறு போன்றது. தினமும் அதன் ஒரு சரடை நாம் நெய்கிறோம். கடைசியில் அது அறுக்க முடியாத வகையில் பலப்பட்டுவிடுகிறது. 02. வெற்றியாளர்களை உற்று நோக்கினால் அவர்கள் எல்லோரிடமும் சில அம்சங்களில் பொதுவான ஒற்றுமை இருக்கக் காண்பீர்கள். ஆலமரத்தின் விதையில் இருந்து அரச மரம் முளைக்காது என்பது போல வெற்றியாளர்களின் விதைகளில் இருந்தே அவர்களும் எழுகிறார்கள். 03. பிரபஞ்சத்தின் இயக்க விதியுடன் கண்ணுக்கு தெரியாமலே ஒவ்வொரு மனிதனும் பிணைக்கப்பட்டுள்ளான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவை விரும்பிய இலட்சியம் நோக்கி நீங்கள் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். 04. மனிதன் ஒவ்வொரு முறை தடுக்கி விழும்போதும் தான் தேடும் நிஜங்கள் மீதே தடுக்கி விழுகிறான். பெரும்பாலானவர்கள் அதை புரிந்து கொள்ளாது மறுபடியும் எழுந்து நடக்கிறார்கள். விழுந்த…