பிரிட்டன்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆட்சிக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் சுமார் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்த ஒப்பந்தம் அடிப்படையில் பிரிட்டன் விலகும் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு ஆதரவாக பிரிட்டனில் 2016-ல் ஏற்பட்ட ஒருமித்தமான முடிவை அமல்படுத்த முடியுமா என்ற சூழல் உருவாகியுள்ளது.

தெரசாவின் கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனின் எதிர்கால உறவு எப்படி இருக்க வேண்டும் என்று வெவ்வேறு கருத்துகளுடன் உள்ளனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தெரசா மே ஒப்பந்தம் மீது விமர்சனம் இருந்த 48 எம்.பி.க்களால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி பெற்றிருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டைப் பதிவு செய்த 200 எம்.பி.க்ககளில் 117 பேர் தெரசாவுக்கு வாக்களித்ததன் அடிப்படையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 60% வாக்குகள் தெரசாவுக்கு கிடைத்துள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகு தெரசா மே பேசும்போது, ”நடக்கவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாட்டில் பிரிக்ஸ்ட் ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொண்டுவரப் போராடுவேன்” என்று கூறினார்.

Related posts