முடிவை மாற்றிய எஸ். ஜானகி!

மூத்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி பாடல்கள் பாடுவதை நிறுத்தி ஓய்வில் இருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் ஒரு காட்சியில் நடித்து கொடுத்தார். அந்த காட்சி படத்தில் இடம்பெறாமல் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் “பண்ணாடி’. இப்படத்தை டி.ஆர்.பழனிவேலன் இயக்கி வருகிறார். இவர், கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர். இப்படத்தின் சில பாடல்களை ஜானகியம்மா பாடினால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் விரும்பி உள்ளனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இனிப் பாடுவதில்லை என ஓய்வை அறிவித்து விட்டதால், அவர் பாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் ஜானகியிடம் கேட்டுள்ளனர். அவரும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக இரண்டு பாடல்களைப் பாடிக் கொடுத்துள்ளார். இதனால் ‘பண்ணாடி’ படக்குழு நெகிழ்ந்து போயுள்ளது. விரைவில் அந்த இரண்டு பாடல்களையும் வெளியிட உள்ளனர்.

Related posts