அகில இலங்கை அணிக்கான தமிழ் வீரர்கள் தேர்வு இறுதியாட்டத்தில்..

அகில இலங்கை அணியில் தமிழர்கள் விளையாட முடியுமா.. முடியும் என்றளவுக்கு காலம் மாறியிருக்கிறது.

அகில இலங்கை அணியில் தமிழர் இடம் பெற்றாலும் அந்த அணி உலகக்கிண்ண போட்டியில் விளையாட முடியுமா.. என்பது அடுத்த கேள்வி.

அதற்கான வேலையையும் ஆரம்பித்திருக்கிறது ரியூப் தமிழின் புத்தகச் சந்தை. மக்களை தன்னம்பிக்கை ஊட்டி சாதனை மனிதர்களாக்க எடுக்கப்பட்ட அரிய முயற்சி என்ற பாராட்டையும் இது பெற்றுள்ளது.

கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம் ஆனால் ஒரு பருப்பொருள் இல்லாவிட்டால் கனவை உருவாக்க முடியாதன்றோ.. பாலைவனத்தில் ரோஜா பூக்காதன்றோ அது போலத்தான் கனவும்.

அது தோன்ற, உயர்ந்த எண்ணங்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும். அதற்காக எழுதப்பட்ட நூல்தான் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர் என்ற புதுமை நூலாகும்.

ஒரு நாட்டை முன்னேற்ற எழுதப்பட்ட நூலாக இருக்கிறது.

உலகக்கிண்ண போட்டிகளிலும், லீக் போட்டிகளிலும் சாதனை படைத்து, தங்கக் கோப்பையை வென்று உலகின் ஈடு இணையில்லாத உதைபந்தாட்ட மேதைகளின் போராட்ட வாழ்வை விளக்கும் நூல் தற்போது தமிழில் அவசியமாகிறது.

இந்தத் தேவையை ஈடு செய்ய தேவைப்படும் நூல் ஒன்றை உருவாக்கும் பணி ரியூப் தமிழ் நிறுவனத்தால் சில ஆண்டுகளின் முன் வடக்கு கிழக்கு இணைந்த உதைபந்தாட்டப் போட்டி நடத்தப்பட்ட போதே முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக..

தனியே பிறந்து வளர்ந்த வாழ்க்கையை எழுதாமல், புகழ் பெற்ற மேதைகள் உதைபந்தாட்ட களங்களில் சந்தித்த போராட்டங்களை ஆதாரமாக வைத்து பத்து உதைபந்தாட்ட லெஜன்ட்களின் வாழ்க்கையை எழுத வேண்டும் என்றும் யோசிக்கப்பட்டது.

இதனடிப்படையில் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்னும் நூலை டென்மார்க்கில் உள்ள எழுத்தாளர் கி.செ.துரை எழுதினார்.

இந்த நூலை தாயகத்தின் உதைபந்தாட்ட வீரரிடையே அறிமுகம் செய்த நிகழ்வை இந்த ஆண்டு வடக்கின் முதல்வராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார்.

இப்போது அந்த நூல் அகில இலங்கை உதைபந்தாட்ட அணிக்கான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக நேற்று வடமராட்சியில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. இறுதியாட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

உதைபந்தாட்ட கனவுகளுடன் வரும் இளைஞர்கள் கைகளில் இப்போது மின்னுகின்ற கனவு நூல் இதுவாகும். இதுவரை இலங்கையில் இப்படியொரு எத்தனம் எடுக்கப்படவில்லை. இந்தப் பெருமை ரியூப் தமிழ் புத்தக சந்தையையே சாரும் என்று அத்தருணம் விளையாட்டு அதிகாரி ஜிவிந்தன் பெருமையுடன் கூறினார்.

அலைகள் 11.12.2018

Related posts