ஞாயிறு தோறும் கூகுள் எழுத்து பயிற்சி எடுக்கிறேன் !

நல்ல புத்தகங்களை நான் வாசிக்க வாசிக்க கூகுள் எழுதும் !

இதோ வாசிக்க ஆரம்பிக்கிறேன் !

புத்தகம் : பிரமாண்டமான சிந்தனைகள் ! பக்கம் ; 150, 151

ஒரு காரியத்தை x எனப்படும் ஒருவர் சொன்னால் மக்கள் விரைவாக செய்கிறார்கள் !

அதையே y எனப்படும் இன்னொருவர் சொன்னால் செய்ய மறுக்கிறார்கள் !

இருவரும் ஒரே பதவியில் தான் இருக்கிறார்கள் ஏன் இந்த வேறுபாடு என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள் ?

நீங்கள் இதை உன்னிப்பாக கவனித்தால் … ஓர் இரகசியம் தெரியும் !

மிக மரியாதையோடு நடத்தப்படுகின்ற மனிதர் தான் மிகப் பெரிய வெற்றியாளராக இருப்பதை காண்பீர்கள்!

இதற்கான அடிப்படை காரணம் என்ன ?

நமக்குள் இரகசியமாக உருவாகும் சிந்தனைதான் காரணம் !

அதுதான் மேற் கூறப்பட்ட வேறுபாடுகளை நிகழ்த்துகிறது !

நம்மில் நாம் எதைப் பார்க்கிறோமோ ? நம்மை அவதானிக்கும் மற்றவர்களும் நம்மில் அதையே தான் பார்க்கின்றனர் ! இது ஓர் உண்மை !!

நமது சிந்தனையே நாம் எப்படி நடத்தப்பட தகுதி உடையவர்கள் என்ற செய்தியை மற்றவருக்கு வழங்குகிறது !

அந்த வகையிலேயே மற்றவர்களும் நம்மை நடத்துகின்றனர் !

மீண்டும் சொல்கிறேன் நம்முடைய சிந்தனைதான் எல்லாவற்றுக்கும் காரணம் !

ஒருவன் எவ்வளவு நல்ல கல்வித்தகுதி பெற்றிருந்தாலும் “தான் தாழ்ந்தவன் ..! “ என்ற நினைப்பு அவனுக்கு இருந்தால் ,
அவன் தாழ்ந்தவனாகவே இருப்பான் !

ஏனெனில் அவன் மட்டமான சிந்தனைதான் அவன் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறது !

தான் தாழ்ந்தவன் என்று ஒருவன் நினைத்தால் அவன் தாழ்ந்தவனாகிறான் . காரணம் அவன் தாழ்ந்தவனாகவே நடந்தும் கொள்வான் !

மேலும் …

நீண்ட காலம் அவனால் அந்த தாழ்வு சிக்கலை மக்கள் மன்றில் மறைக்கவும் முடியாது !

தாழ்ந்தவன் என்று நினைத்தவன் தானாகவே தாழ்ந்து போகிறான் !

அது தாழ்ந்த கப்பல் …

மாறாக உயர்ந்தவன் என்று எண்ணும் ஒருவன் உயர்ந்தவன் ஆகிறான் !

ஆகவே ..

நாம் முக்கியமானவர்களாக இருக்க வேண்டுமென்றால் .. “ நாம் முக்கியமானவர்கள் “ என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும் !

இன்றுவரை இல்லாவிட்டால்
இக்கணமே மாற்றுக்கள் !

அப்போதுதான் மற்றவர்கள் நம்மை முக்கியமானவர்களாக கருதுவார்கள்.

மறந்துவிடாதீர்கள் ..

01. நீங்கள் சிந்திக்கும் விதம் தான் உங்கள் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது !

02. நீங்கள் நடந்து கொள்ளும் நடப்புத்தான் மற்றவர்கள் உங்கள் விடயத்தில் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை தீர்மானிக்கிறது !

03. நீங்கள் உங்கள் மீது எவ்வளவு அதிக மதிப்பு கொண்டிருக்கிறீர்களோ மற்றவர்கள் உங்கள் மீது அவ்வளவு கொண்டிருப்பார்கள் !

இக்கொள்கையை பரிசோதித்துப் பாருங்கள்.

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவரை நீங்கள் மதிப்பீர்களா ? இல்லையே !

ஏனெனில் அவர் தன்னை தானே மதிப்பதில்லை ! அவரை ஏன் நீங்கள் மதிக்க வேண்டும் ?

நினைவில் கொள்ளுங்கள்..

சுய மதிப்பு என்பது நாம் செய்கின்ற எல்லா விஷயங்களிலும் வெளிப்படுகிறது !

நம்முடைய சுய மதிப்பை அதிகரித்து கொள்வதன் மூலம் மற்றவர்களிடமிருந்து அதிக மதிப்பை எடுக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும் !

அதற்கு நீங்கள் முதலில் முக்கியமானவர் போலத் தோன்ற வேண்டும் !

“ நீங்கள் யாரென்று நினைக்கிறீர்களோ அதுதான் நீங்கள் ! “

ஞாயிறு தோறும் நல்ல புத்தகங்களை படித்து அதை நான் டிக்டேட் போல சொல்ல .. சொல்ல Google றோபோ எழுதுகிறது !

அந்த இயந்திரத்திற்கு சரியாக எழுதும் பயிற்சியை கொடுத்து வருகிறேன் !

அவ்வாறு பயிற்சி செய்யும் போது றோபோ கற்றுக்கொள்ளும் என்பதால் செய்கிறேன், உலக தமிழ் மக்களுக்காக !

கூகுள் சுந்தர்பிச்சை வாழ்க
கி.செ. துரை 09

Related posts