வரும் ஏப்பரலில் இருந்து விவாகரத்து செய்வோருக்கு விசேட டிஜிற்றல் பயிற்சி

கணவனுக்கும் மனவிக்குமிடையே மனமுறிவா அது வளர்ந்து மணமுறிவில் போவது உலக அரங்கில் சர்வசாதாரணமான விடயமாகும். டென்மார்க்கில் இப்போது விவாகரத்து வீதம் 47 ஆக இருக்கிறது. கடந்த 30 ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டால் 41 முதல் 54 வீதம் வரை கூடிக்குறைந்து வருகிறது.

விவாகரத்து என்பது வலி மிக்க ஒரு செயல், இதனால் பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பெற்றோரும் டிப்பிரசன், எதிர்காலப் பயம், ஸ்ரெஸ் போன்ற நோய்களாலும் சிலர் உளவியல் சிக்கல்களாலும் பாதிக்கப்பட விவகாரத்து தூண்டுகோலாக அமைகிறது.

இந்த சிக்கல்களை தீர்க்க டேனிஸ் அரசு தன்னாலான முயற்சிகளை அவ்வப்போது எடுத்தும் வருகிறது. இந்த வழியில் ஓரம்சமாக விவாகரத்து தம்பதியர் பிள்ளைகளுக்காக இணையவழியான ஒரு புதிய நிகழ்ச்சித்திட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு கூறுகிறது. அவ்வாறு பங்கேற்காவிட்டால் உளவியல் நிபுணரை சந்திக்க நேரி;டும் என்கிறது.

இந்தத் தீர்மானம் 2019 ஏப்ரல் 1ம் திகதிக்கு பின் விவாகரத்து செய்வோரிடையே பாவிக்கப்பட இருக்கிறது. இந்த டிஜிற்றல் பிளாற்போம் என்கிற தளம் பிரிந்து போகும் பெற்றோர் கண்டிப்பாக அரைமணி நேரம் பங்கேற்க வேண்டிய இணைய வழி ஏற்பாடாகும்.

விவாகரத்து செய்தவர் பிள்ளைகளுக்காக முன்னைய மாஜி வாழ்க்கைத்துணையுடன் தொடர்பு கொண்டு பிள்ளைகள் குறித்த விடயங்களை பேச இந்த இணைய வழி தொடர்பாடல் உதவும். இது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

விவாகரத்திற்கு பின்னர் பிள்ளைகள் உரிமையிலும், பராமரிப்பிலும் பல சிக்கல்கள் வரும். அதைத் தீர்க்க இந்த ஏற்பாடு உதவும். ஏற்கெனவே 2600 விவாகரத்து செய்தோரிடையே இது பரிசீலிக்கப்பட்டுள்ளது.

கோப்பன்கேகன் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை செய்துள்ளதாயினும் இன்னமும் மக்கள் மன்றுக்கு வரவில்லை. இதற்கான சரியான புரிதல்தரும் வசன அமைப்பு இன்னமும் தயாராகவில்லை. சிறிய தவறு இருந்தாலும் பாரிய சிக்கலாக மாறிவிடும்.

இதற்குள்ளே என்ன இருக்கிறது…? கட்டாயப் பயிற்சி ஒரு தடவையா இல்லை தொடருமா..? என்பதெல்லாம் வெளிவரவில்லை.

உடனடியாக பிரிந்துவிட முடியாது பிரதிபலிப்பு காலம் என்று மூன்று மாதங்களை எல்லையாக வைத்துள்ளார்கள். பெற்றோர் நட்பாக பிரிந்தாலும் கொலை வெறியுடன் பிரிந்தாலும் இந்த டிஜிற்றல் பிளாற்போமில் இணைந்து பேச வேண்டியது அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நலம் என்கிறார்கள்.

இதுவரை கிடைத்த தகவல்களின் படி இது 12 மணி நேர கற்பித்தலையும், 20 முக்கிய ஆவணங்களையும், 50 பயிற்சிகளையும் கொண்டிருக்கும். பிரச்சனைக்குரிய இருவரை கட்டுப்படுத்த ஒரு புதிய முயற்சி என்று கூறப்படுகிறது.

எஸ்.ஈ.எஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள இந்தத் மிக அருமையான திட்டம் என்கிறார் குடும்ப நலவாழ்வு அமைச்சர்.

அலைகள் 09.12.2018 ஞாயிறு

Related posts